விதிகளை உடைத்து மூன்றாவது முறையும் வென்ற ஜி ஜின்பிங்: ரஷ்ய ஜனாதிபதி புடின் வாழ்த்து!
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கிற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வாழ்த்து.
பெய்ஜிங்-குடன் விரிவான கூட்டாண்மையை உருவாக்க மாஸ்கோ எதிர்நோக்கியுள்ளது என புடின் அறிவிப்பு.
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மூன்றாவது முறையாக பதவியேற்றதற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சீனாவில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு, தலைநகர் பெய்ஜிங்கில் ஒரு வார காலமாக நடைபெற்ற நிலையில் அதன் நிறைவு விழா நேற்று நடைபெற்று முடிந்துள்ளது.
இதில் சீனாவின் அரச தலைவர்கள் இரண்டு முறை மட்டுமே பதவி வகிக்க முடியும் என்ற முன் உதாரணத்திற்கு முடிவு கட்டி, சீன அதிபர் ஜி ஜின்பிங் மூன்றாவது முறையாக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதன்மூலம் சீனாவில் மாவோவுக்கு பிறகு அதிக காலம் ஜனாதிபதியாக இருப்பவர் என்ற பெருமையை ஜின்பிங் பெறுகிறார். அதாவது, ஜின்பிங் இன்னும் ஐந்து ஆண்டுகள் பதவியில் நீடிக்க உள்ளார்.
இந்நிலையில் மூன்றாவது முறையாக தலைவராக பொறுப்பேற்றுள்ள சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கிற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: “பிரித்தானியா சிறந்த நாடு” நாட்டின் இக்கட்டான சூழ்நிலையில் ரிஷி சுனக் வெளியிட்ட அறிக்கை
Reuters
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், CCP யின் 20 வது ஆண்டு விழாவில் காங்கிரஸின் முடிவுகள் உங்களின் உயர் அரசியல் அதிகாரத்தையும், நீங்கள் வழிநடத்தும் கட்சியின் ஒற்றுமையையும் முழுமையாக உறுதிப்படுத்தியது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பெய்ஜிங்குடன் விரிவான கூட்டாண்மையை உருவாக்க நெருக்கமான கூட்டுப் பணியை தொடர மாஸ்கோ எதிர்நோக்கியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.