நேட்டோ ராணுவ தளங்களின் மீது தாக்குதல்: பிரித்தானிய பாதுகாப்பு தலைவர் எச்சரிக்கை!
உக்ரைனுக்கு வழங்கப்படும் ஆயுதங்களை தடுக்கும் வகையில் நேட்டோ தளங்களின் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தலாம் என முன்னாள் பிரித்தானிய பாதுகாப்புத்துறை தலைவர் எச்சரித்துள்ளார்.
உக்ரைன் மீதான போர் தாக்குதல் கிட்டத்தட்ட 2 மாதங்களை தொடவிருக்கும் நிலையில், உக்ரைனுக்கு ஆதரவாக மேற்கு நாடுகளில் இருந்து வழங்கப்படும் ஆயுத உதவிக்களை தடுக்கும் நோக்கில் நேட்டோ படைத்தளத்தின் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக முன்னாள் பிரித்தானிய பாதுகாப்புத்துறை தலைவர் லார்ட் ரிக்கெட்ஸ் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து பிபிசி தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், புடினின் படைகள் இரண்டாம் உலக போருக்கு பிறகான மிகப்பெரிய ஆயுத ஓட்டத்தை தடுக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் உக்ரைனுக்கு பிறநாடுகளில் இருந்து வழங்கப்படும் ஆயுதங்களுக்கான கான்வாய்கள் மற்றும் விமானங்களை தாக்கி அழிக்க திட்டமிட்டு இருப்பதாவும் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிற்கு எதிராக நடைபெறும் போரில் நேட்டோ படைகள் ஜாவெலின் ஏவுகணைகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
வரும் நாள்களில் தீவிரமடையும் போரில், உக்ரைனின் பல பகுதிகளை ரஷ்யா தனது கட்டுக்குள் கொண்டுவந்து இருக்கும் இருப்பினும், ரஷ்யா முன்வைக்கும் தீர்வு ஒப்பந்தத்திற்கு உக்ரைன் ஏற்றுக்கொள்ளாது, அதனால் இந்த நிலைமை கெரில்லாப் போராக மாறக்கூடும் இவை ஐரோப்பிய யூனியனில் உறுதியற்ற தன்மையை உருவாகும் என தெரிவித்துள்ளார்.
இரசாயன ஆயுதத் தாக்குதல்கள் குறித்து பேசிய அவர், ஜனாதிபதி புடின் நிச்சியமாக உக்ரைனில் அணுஆயுத மற்றும் இரசாயன ஆயுதத் தாக்குதல்களை நடத்த விரும்பலாம் என தெரிவித்துள்ளார்.
பின்வாங்கிய ரஷ்ய படைகளின் தந்திரம்...கண்ணி வெடிகளால் கதிகலங்கி நிற்கும் உக்ரைன்!