மாடி படிக்கட்டில் இடறி விழுந்த ரஷ்ய ஜனாதிபதி புடின்: தீவிர உடல் உபாதையால் பாதிப்பு
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கடந்த வாரம் மாஸ்கோவில் உள்ள தனது வீட்டின் படிக்கட்டில் இறங்கும் போது தவறி கீழே விழுந்தார் என “தி டெலிகிராம்” செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
மோசமடையும் உடல்நிலை
உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கிய சில நாட்களில் ஜனாதிபதி புடினின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக பல செய்தி நிறுவனங்கள் தகவல் வெளியிட்டு இருந்தது.
கடந்த மாதம் கூட கியூபா ஜனாதிபதி மிகுல் டயஸ்-கேனலை ரஷ்ய ஜனாதிபதி புடின் சந்தித்து பேசி கைகுலுக்கிய போது, புடினின் கைகள் நடுங்கியதாகவும், அவர் சிரமப்பட்டு நடப்பதாகவும் பிரித்தானியாவை சேர்ந்த செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டு இருந்தது.
AFP
அத்துடன் உக்ரைன் போர் புடினுக்கு மிகுந்த கவலை அளித்து வருவதாகவும், அவரது உடல் நிலை மோசமடைந்து இருப்பதாகவும் பிரித்தானிய முன்னாள் உளவாளி தெரிவித்து இருந்தார்.
புடினுக்கு நெருக்கமான வட்டாரத்தில் உள்ள ஒருவர் அளித்த தகவலில், ஜனாதிபதி புடின் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.
இடறி விழுந்த புடின்
கடந்த வாரம் மாஸ்கோவில் உள்ள தனது வீட்டின் படிக்கட்டில் இறங்கும் போது ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இடறி விழுந்தார் என “தி டெலிகிராம்” செய்தி நிறுவனம் சமீபத்தில் தகவல் வெளியிட்டுள்ளது.
5 படிக்கட்டுகளை தாண்டி கீழே விழுந்த புடினுக்கு முதுகு தண்டின் அடிப்பகுதி எலும்பு பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகவும், குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு வரும் புடினுக்கு இதனால் தானாக மலம் வெளியேறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.