நேட்டோ அமைப்பில் சேர முறைப்படி அழைப்பு: ஸ்வீடன், பின்லாந்து நாடுகளுக்கு புடின் மிரட்டல்!
ஸ்வீடன் மற்றும் பின்லாந்தில் நேட்டோ உள்கட்டமைப்பை அமைத்தால், ரஷ்யா 'உரிய வகையில்' பதிலளிக்கும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார்.
நார்டிக் நாடுகளான ஸ்வீடன் மற்றும் பின்லாந்து மேற்கத்திய கூட்டணியான நேட்டோவில் சேர வழிவகுத்த ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு புடின் இந்த அச்சுறுத்தலை விடுத்தார்.
ஹெல்சின்கி மற்றும் ஸ்டாக்ஹோம் உடனான மாஸ்கோவின் உறவுகளில் 'பதட்டங்கள் வெளிப்படும்' என்பதை தன்னால் நிராகரிக்க முடியாது என்று புடின் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: தற்செயலாக வந்த ரூ.6.45 கோடி சம்பளம்! பணத்துடன் தப்பியோடிட நபர்
துர்க்மெனிஸ்தான் தலைநகர் அஷ்கபாத்தில் நடந்த செய்தி மாநாட்டில் பேசிய ரஷ்ய ஜனாதிபதி புடின், “ உக்ரைனைப் போல எங்களுக்கு ஸ்வீடன் மற்றும் பின்லாந்தில் பிரச்சினைகள் இல்லை. எங்களுக்கு பிரதேச வேறுபாடுகள் இல்லை.
பின்லாந்து மற்றும் ஸ்வீடன் விரும்பினால், அவர்கள் சேரலாம். அது அவர்களுக்கே. அவர்கள் என்ன வேண்டுமானாலும் சேரலாம்” என்று அவர் கூறினார்.
எவ்வாறாயினும், "இராணுவக் குழுக்கள் மற்றும் இராணுவ உள்கட்டமைப்புகள் அங்கு நிலைநிறுத்தப்பட்டால், நாங்கள் சமச்சீராக பதிலளிக்க கடமைப்பட்டுள்ளோம், மேலும் எங்களுக்கு அச்சுறுத்தல்கள் எழுந்துள்ள பிரதேசங்களுக்கும் அதே அச்சுறுத்தல்களை எழுப்புவோம்" என்று அவர் எச்சரித்தார்.
விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதன் மூலம் ரஷ்யாவின் கோபத்தைத் தூண்டிய ஆறு வாரங்களுக்குப் பிறகு, ஃபின்லாந்து மற்றும் ஸ்வீடனை கூட்டமைப்பில் சேருமாறு புதன்கிழமையன்று நேட்டோ முறைப்படி அழைத்தது.
இதையும் படிங்க: கனேடிய வங்கியில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் மரணம்