10 லட்சம் இந்தியர்களை வேலைக்கு அமர்த்தவுள்ள உள்ள நாடு
அமெரிக்கா, பிரித்தானிய உள்ளிட்ட நாடுகள் வெளிநாட்டவருக்கான குடியேற்ற விதிகளை கடுமையாக்கி வருகிறது.
அதேவேளையில், ரஷ்யா நிறுவனங்கள் அதிகளவிலான இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க ஆர்வம் காட்டி வருகிறது.
10 லட்சம் இந்தியர்களுக்கு வேலை
இது குறித்து பேசிய ரஷ்யாவிற்கான இந்திய தூதர் வினய் குமார், "இந்தியாவில் திறமையான மனித வளம் உள்ளது. ரஷ்யாவில் அதிகளவில் மனிதவளம் தேவைப்படுகிறது.
ரஷ்யா விதிமுறைகள் மற்றும் சட்ட கட்டமைப்பிற்கு ஏற்ப இந்தியர்கள் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே, கட்டுமானம் மற்றும் ஜவுளித்துறைகளில் பெரும்பாலான இந்தியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
தற்போது இயந்திர மற்றும் மின்னணு நிறுவனங்களில் இந்தியர்களை பணியமர்த்த ரஷ்யா நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. அதிகளவிலான இந்தியர்கள் வந்து செல்வதால் தூதரக பணிகளும் அதிகரித்துள்ளன" என தெரிவித்துள்ளார்.
மேலும், "இந்த ஆண்டு இறுதிக்குள் 10 லட்சம் நிபுணர்கள் இந்தியாவில் இருந்து ரஷ்யாவிற்கு வருவார்கள் என எதிர்பார்ப்பதாகவும், இதனை கையாள யெகாடெரின்பர்க்கில் புதிய துணைத்தூதரகம் திறக்கப்படும்" என யூரல் வர்த்தக மற்றும் தொழில்துறை சபையின் தலைவர் ஆண்ட்ரி பெசெடின் தெரிவித்துள்ளார்.
விசா குறித்து எச்சரிக்கும் தூதரகம்
குறுகிய கால பணிகளுக்கான ஒற்றை நுழைவு பணி விசா, நீண்ட கால வேலைகளுக்கான பல நுழைவு பணி விசா, நிபுணர்களுக்கான உயர் தகுதி வாய்ந்த சிறப்பு விசா, சுயதொழில் செய்பவர்களுக்கான பணி காப்புரிமை என வேலைவாய்ப்புக்காக ரஷ்யா பல்வேறு வகையான விசாக்களை வழங்கி வருகிறது.
அதேவேளையில், இந்தியாவில் உள்ள சில முகவர்கள் ரஷ்யாவில் வேலைவாங்கி தருவதாக கூறி, சுற்றுலா அல்லது வணிக விசாக்களில் அழைத்து வரும் மோசடி நடைபெறுவதாக இந்தியா தூதரகம் எச்சரித்தது.
[
ரஷ்யா வந்த பின்னர், விசாவின் வகையை மாற்றிக்கொள்ள முடியாது. ரஷ்யாவில், தற்போது 14,000 இந்தியர்கள் வசித்து வருகிறார்கள்.
இதில், 4500 பேர் மாணவர்கள் ஆவார்கள். 90% பேர் மருத்துவ பல்கலைகழகங்களில் பயின்று வருகிறார்கள்.
மற்றவர்கள், பொறியியல், போக்குவரத்து தொழில்நுட்பம், விமான வடிவமைப்பு, விவசாயம், வணிக மேலாண்மை ஆகியவற்றை பயின்று வருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |