தாக்கப்பட்ட உக்ரைன் துறைமுகம்...தானிய ஏற்றுமதிக்கு மீண்டும் உறுதி அளிக்கும் ரஷ்யா: தாக்குதல் காட்சிகள்!
உக்ரைனுடன் மேற்கொள்ளப்பட்ட தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தை மீறி அந்த நாட்டின் துறைமுகங்கள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்திய நிலையில், உலக நாடுகளுக்கான தானிய ஏற்றுமதி குறித்த ஒப்பந்தத்திற்கு மீண்டும் உறுதி அளிப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
உலக உணவு தானிய ஏற்றுமதியில் முக்கிய உற்பத்தியாளர்களாக திகழும் உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய இருநாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள போர் நடவடிக்கையின் மூலம், பல மில்லியன் டன் தானியம் உக்ரைனிய துறைமுகங்களில் ரஷ்ய படைகளால் சிறைப்பிடித்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த வாரம் துருக்கியின் இஸ்தான்புல் மாகாணத்தில் வைத்து நடைபெற்ற நிகழ்ச்சியில், உக்ரைனின் கருங்கடல் துறைமுகங்களை சிறைப்பிடித்து ரஷ்ய படைகள் தடுத்து வைத்துள்ள உணவு தானியங்களை விடுவிப்பது தொடர்பாக முக்கிய ஒப்பந்தம் ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது.
BBC Ukraine report on Russia's cruise missile strike on #Odesa port grain terminal the day after Russia signed a #BlackSeaInitiative agreement with Turkey and the UN. #FoodCrisis #Grain #FoodSecurity https://t.co/Juop6bcHkH
— Andy Scollick (@Andy_Scollick) July 24, 2022
ஆனால் இந்த ஓப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட 24 மணி நேரத்திற்குள்ளாகவே உக்ரைனின் முக்கிய துறைமுக நகரான ஒடேசா ரஷ்ய படைகளின் ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளானது.
இதனால் உக்ரைனில் இருந்து உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட வேண்டி இருக்கும் சுமார் 10 மில்லியன் டன் உணவு தானியங்களின் ஏற்றுமதி மீண்டும் கேள்வி குறியாகியுள்ளது.
இந்நிலையில், உக்ரைனுடன் மேற்கொள்ளப்பட்ட உணவு ஒப்பந்தத்திற்கு ரஷ்யா மீண்டும் உறுதியளிப்பதாக அந்த நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் (Sergei Lavrov) தகவல் தெரிவித்துள்ளார்.
எகிப்தின் கெய்ரோவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது செய்தியாளர்களை சந்தித்த செர்ஜி லாவ்ரோவ், ரஷ்ய தானிய ஏற்றுமதியாளர்கள் தங்கள் அனைத்து கடமைகளையும் நிறைவேற்றுவதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினர்.
கூடுதல் செய்திகளுக்கு: பிரித்தானிய சாலையில் இளைஞருக்கு நடந்த பரிதாபம்: விசாரணையை தீவிரப்படுத்தும் காவல்துறை!
மேலும் உணவு தானிய ஏற்றுமதி குறித்து தனித்துவமான சிறப்பு அளவிடுகளை வைத்து விவாதித்து வருவதாகவும், உணவு தானிய பற்றாக்குறை குறித்து அனைவருக்குமான பொதுவான சிந்தனை ரஷ்யாவிற்கும் இருப்பதாகவும் தெரிவித்தார்.