ட்ரம்ப் நெருக்கடி ஒருபக்கம்... ரஷ்யா அறிமுகம் செய்த மிக மோசமான ஆயுதம்
போர்கள் எந்த நாட்டிற்கும் அதன் மக்களுக்கும் ஒருபோதும் நல்லதல்ல என்றாலும், ஒவ்வொரு நாடும் முழு உலகிற்கும் முன்னால் தனது மேன்மையை நிரூபிக்கவே விரும்புகிறது.
எதிரிகளை ஓட வைக்கும்
உலகின் வலிமையான நாடுகள் கூட மிகவும் ஆபத்தான ஆயுதங்களை வைத்திருக்கவும், வான் பரப்பில் ஆதிக்கம் செலுத்தவும் போராடும் காலகட்டம் இது. இந்த நிலையில், ரஷ்யா மீண்டும் ஒருமுறை தனது ஆதிக்கத்தைக் காட்டியுள்ளது.
ரஷ்யா சமீபத்தில் Su-35S என்ற போர் விமானத்தைப் பெற்றது, தற்போது அதன் விமானப்படையிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. வானத்தின் சிங்கம் என்று விமானிகளால் கொண்டாடப்படும் போர் விமானம் இது.
இதன் கர்ஜனையே எதிரிகளை ஓட வைக்கும் என்கிறார்கள். ரஷ்யாவின் UAC என்ற நிறுவனமே தயாரித்து, உத்தியோகப்பூர்வமாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சஜத்திடம் ஒப்படைத்துள்ளது.
மேற்கத்திய நாடுகளின் கடுமையான பொருளாதாரத் தடைகளால் ரஷ்யா நெருக்கடியை எதிர்கொண்டுவரும் சூழலில் UAC நிறுவனம் Su-35S போர் விமானத்தைக் கைமாறியுள்ளது. மட்டுமின்றி, கடுமையான தடைகள் இருந்தும் UAC நிறுவனம் அதன் உற்பத்தியை நிறுத்தவில்லை என்றே கூறப்படுகிறது.
ஒரே நேரத்தில் 30 இலக்கு
Su-35S ஒரு 4++ தலைமுறை மல்டிமிஷன் போர் விமானமாக வகைப்படுத்தப்படுகிறது. இது மாக் 2.25 வேகத்தில் அல்லது மணிக்கு தோராயமாக 2,400 கிலோமீற்றர் வேகத்தில் பறக்க முடியும் என்று கூறப்படுகிறது.
Su-35S போர் விமானத்தால் 18,000 மீற்றர் உயரத்தை அடைய முடியும் என்பதுடன் 3,600 கிலோமீற்றர் தூரம் வரை சென்று தாக்கும் திறன் கொண்டது என்பதால் மிகவும் ஆபத்தானது என்றே குறிப்பிடுகின்றனர். இதில் பயன்படுத்தப்படும் ரேடாரால் 400 கிலோமீற்றர் தொலைவில் உள்ள இலக்குகளை கண்டறிய முடியும்.
Su-35S போர் விமானத்தால் ஒரே நேரத்தில் 30 இலக்குகளைக் கண்காணிக்கவும், அவற்றில் 8 இலக்குகளை ஒரே நேரத்தில் தாக்கவும் முடியும். Su-35S என்பது முழுமையான ஸ்டெல்த் விமானம் அல்ல, அதன் வடிவமைப்பு மற்றும் மின்னணு அமைப்புகள் அதை ரேடாரில் ஓரளவு கண்டறிய முடியாததாக ஆக்குகின்றன.
இந்த விமானமானது 30 ஆண்டுகளுக்கும் மேலான ஆயுட்காலம் கொண்டது; எனவே, இது ரஷ்யாவின் விமான சக்திக்கு நீண்டகால ஊக்கமாக இருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |