வாடிக்கையாளர்கள் இல்லை... ரஷ்யாவில் மூடப்படும் உணவகங்கள், கஃபேக்கள்
உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து ரஷ்யாவில் பல உணவகங்கள் மற்றும் கஃபேக்கள் வியாபாரமின்றி மூடப்படும் கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உணவுக்காக செலவிடுவதை
வசதிப்படைத்த மாஸ்கோவில் கூட பல உணவகங்கள் வாடிக்கையாளர்கள் இல்லாமல் மூடப்படும் நிலை. இது மாஸ்கோ முதல், 6,500 கி.மீ தொலைவில் அமைந்துள்ள Vladivostok வரையில் கண்கூடாக பார்க்க முடியும் என்றே கூறுகிறார்கள்.

ஆனால், மேற்கத்திய நாடுகளின் கடுமையான தடைகளை எதிர்கொண்டு வியக்கத்தக்க வகையில் மீள்தன்மையுடன் செயல்பட்டு வரும் ரஷ்யாவின் 2.8 டிரில்லியன் டொலர் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க மந்தநிலையை இது சுட்டிக்காட்டுகிறது என்றே கூறுகின்றனர்.
தென்மேற்கு மாஸ்கோவில் அமைந்துள்ள BonCafe உணவகத்தின் உரிமையாளர் கூறுகையில், இப்படியான ஒரு நெருக்கடியை இதுவரை சந்தித்ததில்லை என்றும், மூலப்பொருள் விலைகளில் 50 சதவீத உயர்வு, அதிக வாடகை மற்றும் அதிக வரிகள் ஆகியவற்றின் கலவையால் செலவுகள் அதிகரித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்ய மக்கள், பிப்ரவரி 2022 உக்ரைன் படையெடுப்பின் அதிர்ச்சிக்குப் பிறகு, மிக விரைவான விகிதத்தில், விருப்பப்படி செலவினங்களை, குறிப்பாக விலையுயர்ந்த உணவுக்காக செலவிடுவதை வெகுவாகவே குறைத்து வருகின்றனர்.
ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளில், மேற்கத்திய நாடுகளின் சுமார் 24,000 தடைகள் இருந்தபோதிலும், ரஷ்யா யூரோ மண்டலத்தை விட சிறந்த சராசரி வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது என்றே விளாடிமிர் புடினின் பொருளாதார அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
மலிவான உணவங்களை
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவின் மிக மோசமான போரின் மோசமான தாக்கத்திலிருந்து பெருமளவில் பாதுகாக்கப்பட்ட 22 மில்லியன் மக்களைக் கொண்ட பரந்த நகர்ப்புறப் பகுதியான மாஸ்கோவிலும் கூட அதிக வட்டி விகிதங்கள், அதிக வரிகள், விலை உயர்வு மற்றும் ரஷ்ய எண்ணெய்க்கு பீப்பாய்க்கு 20 டொலர் தள்ளுபடி உள்ளிட்டவை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.
கடந்த இரண்டு ஆண்டுகளில் முதல் முறையாக பிப்ரவரியில் உண்மையான நுகர்வோர் செலவின வளர்ச்சி பூஜ்ஜியமாகக் குறைந்துள்ளதாக ஆய்வு முகமை ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.

2025 ஆம் ஆண்டில் 1% ஆக இருந்த ரஷ்யாவின் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு 1.3% ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனால், சர்வதேச நாணய நிதியம் 2026 ஆம் ஆண்டுக்குள் 0.8% வளர்ச்சியைக் கணித்துள்ளது.
மேலும், ரஷ்யாவின் 11 நேர மண்டலங்களிலும், மக்கள் மலிவான உணவங்களை நாடுகின்றனர் என்றே மத்திய வங்கி ஆராய்ச்சி காட்டுகிறது.
ஹொட்டலுக்கு செல்வதை மொத்தமாக தவிர்த்துள்ள ரஷ்ய மக்கள் துரித உணவங்கள் அல்லது வணிக வளாகங்களில் விற்பகப்படும் உணவுகளை நாடுகின்றனர். இதனால் 2024 ஆம் ஆண்டை விட உணவகங்கள் மற்றும் கஃபேக்கள் மூடப்படுவது 2025ல் அதிகரித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |