நள்ளிரவில் ரஷ்யா நடத்திய வான்வழி வேட்டை: குறிவைக்கப்பட்ட உக்ரைனின் தரவு மையங்கள்
Russia’s Night Attacks Targets Ukraine data centres: உக்ரைனின் கீவ் மற்றும் ஓடேசா பிராந்தியத்தில் உள்ள முக்கிய உள்கட்டமைப்புகளை தாக்கி அழித்து இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்
செவ்வாய்க்கிழமை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், உக்ரைனிய தலைநகர் கீவ் மற்றும் ஓடேசா பிராந்தியத்தில் உள்ள உள்கட்டமைப்பு தளங்களை குறிவைத்து நேற்றிரவு ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக தலைநகர் கீவ்வில் ராணுவத்திற்கான உளவுத் தகவல்களை கையாண்டு வரும் 2 முக்கிய தரவு மையங்களை இலக்காக வைத்து இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பிளமிங்கோ குரூஸ் ஏவுகணைகள் மற்றும் அதன் உதிரி பாகங்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த ரயில் நிலைய பணிமனையும் அருகில் இருந்த கிடங்கும் தாக்குதலில் இலக்கு வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஓடேசாவின் போக்குவரத்து மற்றும் மின்சார மையங்களை குறிவைத்தும் தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் அல்லது காயங்கள் யாருக்கும் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து எந்தவொரு தகவலும் இல்லை.