நிலவிற்கு ஏவப்பட்டது லூனா 25... முதலில் நிலவை தொடும் விண்கலம் இதுவா!
ரஷ்யா 47 ஆண்டுகளுக்குப் பிறகு லூனா 25 ஐ வெற்றிகரமாக ஏவியது.
ரஷ்யாவின் அமுர் பிராந்தியத்தில் உள்ள வோஸ்டோச்னி காஸ்மோட்ரோமில் இருந்து விண்கலம் புறப்பட்டது.
லூனா 25 பயணம்
அமெரிக்கா, சீனா, இந்தியா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய யூனியன் போன்ற பெரும் வல்லரசுகள் அனைத்தும் சமீப ஆண்டுகளில் நிலவை ஆய்வு செய்து வருகின்றன. தென் துருவத்தில் எந்த நாடும் மென்மையான தரையிறக்கம் செய்யவில்லை. அங்கு கரடுமுரடான நிலப்பரப்பு ஆகவே தரையிறக்குவது மிகவும் கடினம். அந்த முயற்சியை சந்திரயான் 3 மற்றும் லூனா 25 எடுத்துள்ளது.
அந்தவகையில் சந்தியான் 3 கடந்த மாதம் ஏவப்பட்டது. ரஷ்யாவின் லூனா 25 இன்று நிலவுக்கு ஏவப்பட்டுள்ளது.
விண்கலம் முதலில் பூமியைச் சுற்றியுள்ள சுற்றுப்பாதையில் நுழைந்து சந்திர சுற்றுப்பாதைக்கு மாற்றப்பட்டு இறுதியில் நிலவின் மேற்பரப்பில் இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Roscosmos/Handout/Reuters
லூனா 25 மற்றும் இந்தியாவின் சந்திரயான் -3 இரண்டும் ஆகஸ்ட் 23 அன்று சந்திரனின் தென் துருவத்தில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் எந்த நாடு முதலில் தரையிறங்கும் என்பதே தற்போது ஒரு போட்டியாக இருகின்றது.
Liftoff! #Luna25
— kc (@aysneutrino) August 10, 2023
the first Russian Moon launch since 1976. pic.twitter.com/h1yOEua70l
நிலவில் மாதிரிகளை சேகரித்து நீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா? என்று லூனா-25 ஆய்வு செய்யும் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
2021 ஆம் ஆண்டு திட்டமிட்டு சில காரணங்களால் தாமதமாகி, தற்போது ஏவப்பட்டு இருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Congratulations, Roscosmos on the successful launch of Luna-25 ?
— ISRO (@isro) August 11, 2023
Wonderful to have another meeting point in our space journeys
Wishes for
??Chandrayaan-3 &
??Luna-25
missions to achieve their goals.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |