ஏழை நாடுகளுக்கான உணவு தானிய ஏற்றுமதி: ஒப்பந்தத்திற்கு மீண்டும் திரும்பிய ரஷ்யா
தானிய வழித்தட ஒப்பந்தம் புதன் கிழமை மீண்டும் முன்பு இருந்ததைப் போலவே தொடரும்.
தானியங்கள் சோமாலியா, ஜிபூட்டி மற்றும் சூடான் உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளுக்கு வழங்க முன்னுரிமை.
துருக்கி மற்றும் ஐ.நா உடனான உக்ரைனிய தானிய ஒப்பந்தத்தில் ரஷ்யா மீண்டும் இணைந்ததை அடுத்து உக்ரைன் தானிய ஏற்றுமதி புதன்கிழமை முதல் மீண்டும் வழக்கம் போல் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன்-ரஷ்யா போர் நடவடிக்கையால் பல மாதங்களாக தேங்கி இருந்த உணவு தானிய ஏற்றுமதி, துருக்கி, ஐ.நா சபை, ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட பரஸ்பர ஒப்பந்தத்தின் வாயிலாக மீண்டும் தொடங்கப்பட்டது.
Sergey Kozlov/EP
இந்த ஒப்பந்தமானது கடந்த சில நாட்களுக்கு முன்பு காலாவதியானதை தொடர்ந்து, உக்ரைனுடனான உணவு தானிய ஏற்றுமதியை தொடர போவது இல்லை என ரஷ்யா அறிவித்தது.
இதற்கு பதிலளித்த துருக்கி மற்றும் ஐ.நா சபை, கருங்கடல் வழியாக ஏற்றுமதி செய்யப்படும் உக்ரைன் தானிய ஒப்பந்தம் முன்பு இருந்ததைப் போலவே தொடரும் என அறிவித்தனர்.
இந்த நிலையில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு துருக்கியின் ஹுலுசி அகரை (Hulusi Akar) அழைத்து தானிய வழித்தட ஒப்பந்தம் புதன் கிழமை மீண்டும் "முன்பு இருந்ததைப் போலவே தொடரும்" என தெரிவித்தாக துருக்கி ஜனாதிபதி தையிப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.
Reuters
கூடுதல் செய்திகளுக்கு: சச்சினை கண்முன் நிறுத்திய விராட் கோலி: மைதானத்தில் பறந்த சிக்ஸரில் அசந்து போன ரசிகர்கள்
உக்ரைனின் தானியங்கள் பெரும்பாலும் பணக்கார நாடுகளுக்கு வழங்கப்படுவதாக ரஷ்யா தெரிவித்து இருந்த நிலையில், இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஏற்றுமதி செய்யப்படும் தானியங்கள் சோமாலியா, ஜிபூட்டி மற்றும் சூடான் உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளுக்கு வழங்குவதற்கு முன்னுரிமை வழங்கப்படும் என எர்டோகன் குறிப்பிட்டுள்ளார்.