வேறொரு நாட்டிலிருந்து ட்ரோன் தாக்குதல் நடத்த திட்டமிட்ட உக்ரைன்
லாட்வியாவின் நிலப்பரப்பை ஏவுதளமாகப் பயன்படுத்த உக்ரேனிய இராணுவம் திட்டமிட்டுள்ளதாக ரஷ்ய உளவுத்துறை கூறியுள்ளது.
ட்ரோன் தாக்குதல்
ரஷ்யாவிற்கு எதிரான தனது தொடர்ச்சியான ட்ரோன் தாக்குதல்களுக்கு, லாட்வியாவின் நிலப்பரப்பை ஏவுதளமாகப் பயன்படுத்த உக்ரைன் திட்டமிட்டுள்ளது. இதனை ரஷ்யாவின் வெளிநாட்டு உளவுத்துறை செவ்வாயன்று கூறியது.
இதுதொடர்பான அறிக்கை ஒன்றில், "ரஷ்யாவின் பதிலடித் தாக்குதல்களுக்கு இலக்காகிவிடுவோமோ என்ற அம்சங்கள் இருந்தபோதிலும், நாட்டிற்குள் இருந்து உக்ரைன் ட்ரோன்களை ஏவ லாட்வியா அரசாங்கம் ஒப்புக்கொண்டது" என உளவுத்துறை குற்றம்சாட்டியது.
மேலும் அந்த அறிக்கையில், லாட்வியாவின் தற்போதைய ஆட்சியாளர்களின் பழமையான ரஷ்ய வெறுப்பு, அவர்களின் விமர்சன சிந்தனைத் திறனையோ அல்லது தற்காப்பு உணர்வையோ விட வலிமையானதாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
அத்துடன் உக்ரேனிய ட்ரோன் படை வீரர்கள் ஏற்கனவே 5 லாட்விய இராணுவத் தளங்களில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் ரஷ்யாவின் உளவுத்துறை கூறியது. ஆனால், லாட்வியா அரசாங்கம் இந்தக் குற்றச்சாட்டை உடனடியாக நிராகரித்துள்ளது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |