20க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மூலம் தாக்குதல்: உக்ரைனின் தலைநகரை சூறையாடிய ரஷ்யா
உக்ரைனின் முக்கிய நகரான கிய்வ் நகரின் மீது, ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் பாரிய இழப்பு ஏற்பட்டுள்ளது.
ரஷ்யா-உக்ரைன் போர்
ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையே தொடர்ந்து போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உக்ரைனின் முக்கிய நகரமான கிய்வை குறிவைத்து, ரஷ்யா இந்த மாதங்களில் மட்டும் நிறைய தாக்குதல்களை நடத்தியுள்ளது.
@skynews
இந்த தாக்குதலில் கிய்வ் நகரின் மக்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். நள்ளிரவில் திடிரெனெ நடத்தப்படும் வான்வெளி தாக்குதலால், உக்ரைன் படையினரால் எதிர் தாக்குதல் நடத்தி முறியடிக்க முடியவில்லை.
@skynews
நேற்று பகல் பொழுதில் ரஷ்யா, உக்ரைனின் மூன்று முக்கிய பகுதிகளில் தொடர்ந்து, வான்வெளி தாக்குதல் நடத்தியது. இதில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் குண்டு வெடிப்பு ஏற்பட்டது.
20க்கும் மேற்பட்ட ட்ரோன்கள்
இந்நிலையில் 20க்கு மேற்பட்ட ட்ரோன்கள் கிய்வ் நகரின் மீது, சுமார் மூன்று மணி நேரம் நடத்திய தாக்குதலில், கட்டிடங்கள் சிதைந்து பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
@skynews
மேலும் இந்த தாக்குதல் பல்வேறு திசைகளிலிருந்து வந்ததால், எங்களால் எளிதில் கணிக்க முடியவில்லை’ என உக்ரைன் ராணுவ குழு டெலிகிராமில் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல் மூன்று மணி நேரத்திற்கு மேல் நீடித்ததாகவும், 20க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் கிய்வ் நகரின் வெவ்வேறு பகுதியை தாக்கியதாகவும் உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.
@Telegram
நள்ளிரவில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலால், பாரிய இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும், இடிபாடுகளுக்குள் சிக்கி சிலர் உயிரிழந்திருப்பதாக அந்நகரின் மேயர் தெரிவித்துள்ளார்.