பிரபல ஐரோப்பிய நாட்டிற்கு 30,000 போர் படைகள், நவீன ஆயுதங்களை நகர்த்திய ரஷ்யா! நேட்டோ தகவல்
பிரபல ஐரோப்பிய நாடான பெலாரஸுக்கு ரஷ்யா 30,000 படைகள் மற்றும் நவீன ஆயுதங்களை நகர்த்தியுள்ளதாக நேட்டோ தெரிவித்துள்ளது.
பிரஸ்ஸல்ஸில் செய்தியாளர்களை சந்தித்த நேட்டோ பொதுச்செயலாளர் Jens Stoltenberg கூறியதாவது, கடந்த சில நாட்களில் ரஷ்யா சுமார் 30,000 போர் படைகள் மற்றும் நவீன ஆயுதங்களை பெலாரஸுக்கு நகர்த்தி இருக்கிறது.
பனிப்போர் முடிவுக்கு வந்த பின்னர் பெலாரஸுக்கு ரஷ்யா அனுப்பும் மிகப்பெரிய இராணுவப்படை இது என்று நேட்டோ பொதுச்செயலாளர் Stoltenberg தெரிவித்தார்.
இதில் Speznaz சிறப்பு நடவடிக்கைப் படைகள், SU-35 போர் விமானங்கள், இரட்டை திறன் கொண்ட Iskander ஏவுகணைகள் மற்றும் S-400 வான் பாதுகாப்பு அமைப்புகள் ஆகியவை அடங்கும் என்று அவர் கூறினார்.
இவை அனைத்தும் ரஷ்யாவின் வருடாந்திர அணுசக்திப் பயிற்சியுடன் இணைக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.
முன்னதாக, உக்ரேனிய எல்லைக்கு அருகில் கூட்டு இராணுவப் பயிற்சிக்காக பெலாரஸுக்கு அனுப்பப்பட்டுள்ள ரஷ்ய படைகள் குறைந்தபட்சம் பிப்ரவரி 20 வரை நாட்டில் இருக்கும் என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் புதன்கிழமை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.