ரஷ்யாவுக்குள் அத்துமீறி சீறிப்பாய்ந்த 11 உக்ரைனிய ட்ரோன்கள்: ரஷ்ய பாதுகாப்பு படை அதிரடி
ரஷ்ய பிராந்தியத்திற்குள் அத்துமீறிய 11 உக்ரைனிய ட்ரோன்களை ரஷ்ய வான் பாதுகாப்பு படைகள் சுட்டு வீழ்த்தி உள்ளது.
உக்ரைன்-ரஷ்யா மோதல்
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை 4 வது ஆண்டாக விடாமல் நடைபெற்று வரும் நிலையில், இருநாடுகள் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் அமெரிக்கா தலைமையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் இருந்தாலும் மறுபுறம் இருநாடுகளும் தொடர்ந்து ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
ரஷ்ய படைகள் அதிரடி
அந்த வகையில் வெள்ளிக்கிழமை ரஷ்ய நகரங்களை குறிவைத்து உக்ரைனிய இருந்து 11 ஆளில்லா ட்ரோன்கள் ஏவப்பட்ட நிலையில் அவற்றை ரஷ்ய வான் பாதுகாப்பு படைகள் வெற்றிகரமாக இடைமறித்து சுட்டுத் தள்ளியுள்ளனர்.
ரஷ்ய நேரப்படி மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரையிலான காலகட்டத்தில் அரை மணி நேர இடைவெளியில் இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவை வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

தாதர்ஸ்தான், கிரிமியன் தீபகற்பம், அசோவ் கடல் பகுதி, வோரோனேஜ் மற்றும் ரோஸ்டோவ் பிராந்தியங்கள் ஆகியவற்றில் உக்ரைனிய ட்ரோன்கள் இடைமறிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய அமைச்சகத்தின் தகவலில், இந்த உக்ரைனிய ட்ரோன் ஊடுருவலில் பொதுமக்கள் யாரும் உயிரிழக்கவோ அல்லது பெரிய அளவிலான சொத்து சேதங்களோ ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |