ரஷ்யாவை குறிவைத்த 41 உக்ரைனிய ட்ரோன்கள்: ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட தகவல்
41 உக்ரைனிய ட்ரோன்களை இரவோடு இரவாக சுட்டு வீழ்த்தி இருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன்கள்
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் தகவல்படி, ரஷ்யாவிற்குள் அத்துமீறி நுழைந்த 41 ஆளில்லா தாக்குதல் விமானங்கள் இரவோடு இரவாக சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் பல பிராந்தியங்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் பிரியான்ஸ்க் பிராந்தியத்தில் மட்டும் 12 உக்ரைனிய ட்ரோன்களை ரஷ்யா சுட்டு வீழ்த்தியுள்ளது.
மேலும் கலுகா பிராந்தியத்தில் 5 ட்ரோன்களும், பாஷ்கோர்டோஸ்தான் பிராந்தியத்தில் 5 ட்ரோன்களும், மாஸ்கோ பிராந்தியத்தில் 3 ட்ரோன்களும், பெல்கோரோட் மற்றும் ஓரியோல் பிராந்தியத்தில் 2 ட்ரோன்களும் சுட்டு வீழ்த்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் குறித்து இதுவரை உக்ரைன் எத்தகைய தகவலும் வெளியிடவில்லை.
அதே நேரத்தில் இந்த உக்ரைனிய ட்ரோன் தாக்குதலில் உயிரிழப்புகள் அல்லது யாருக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த தகவலும் தெரியவரவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |