ரஷ்யா கீவ்வைக் கைப்பற்றத் தொடங்கினால்..ஜெலன்ஸ்கி எங்கு செல்வார்? தூதர் சொன்ன தகவல்
ரஷ்யாவுடனான மோதலில் தேவைப்பட்டால் மரணம் வரை போராடவும் ஜெலன்ஸ்கி தயாராக இருப்பதாக பிரித்தானியாவுக்கான உக்ரைன் தூதர் Vadym Prystaiko தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது தொடர்ந்து 20வது நாளாக தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, அந்நாட்டின் தலைநகர் கீவ் மீது சரமாரி தாக்குதல் நடத்தி வருகிறது.
எனினும், உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, கீவ் நகரில் இருந்த படி தொடர்ந்து சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்டு வருகிறார்.
இதனிடையே தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த பிரித்தானியாவுக்கான உக்ரைன் தூதர் Vadym Prystaiko, ரஷ்ய படைகள் தலைநகரை நெருங்கினாலும், கீவில் இருந்துக்கொண்டே போராட ஜனாதிபதி ஜெலன்ஸ்கி ஏற்கனவே முடிவெடுத்துள்ளார்.
உக்ரைனின் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க ஜனாதிபதியை பாதுகாப்பாக வைத்திருப்பது முக்கியம் என்று சிலர் வாதிட்டாலும், உக்ரேனியர்களுக்கு ஆதரவை வெளிப்படுத்துவது மிகவும் முக்கியமானது என்று ஜெலன்ஸ்கி நம்புகிறார்.
உக்ரேனி ஜனாதிபதியை கொல்ல ரஷ்ய கூலிப்படைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், தற்போது வரை ஜெலன்ஸ்கியை கொல்ல பல முறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக Vadym Prystaiko கூறினார்.
மேலும், தேவைப்பட்டால் கீவ் நகரில் இருந்த படி மரணம் வரை போராடவும் தயாராக இருப்பதாக ஜெலன்ஸ்கி சொன்னதாக Vadym Prystaiko தெரிவித்தார்.