உக்ரைனிலிருந்து பல லட்சம் டன் உணவுப் பொருட்கள் மாயம்... அம்பலமான ரஷ்யா
உக்ரைனிலிருந்து பல லட்சம் டன் உணவுப் பொருட்களை ரஷ்ய திருடியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
உக்ரைனில் ரஷ்யா ஆக்கிரமித்துள்ள பகுதியில் தானியங்களைத் திருடுவதாக உக்ரைனின் வெளியுறவு அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.
இது உலகளாவிய உணவுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை அதிகரித்ததாக உக்ரைனின் வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.
ரஷ்யப் படைகள் பல லட்சம் டன்கள் தானியங்களைத் திருடிவிட்டன என்று உக்ரைனின் துணை விவசாய அமைச்சரும் குற்றம் சாட்டியுள்ளார்.
பிரான்சில் சாலையிலே திடீரென வெடித்து தீப்பற்றி எரிந்த எலக்ட்ரிக் பேருந்து! வெளியான காணொளி
உக்ரேனிய தேசிய தொலைக்காட்சியிடம் பேசிய Taras Vysotskiy, ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள 1.5 மில்லியன் டன் தானியங்கள் ரஷ்யப் படைகளால் திருடப்படலாம் என்று அவர் பெரும் கவலையை வெளிப்படுத்தினார்.
முன்னதாக, உக்ரைனில் திருடிச்சென்ற கார் உட்பட வாகனங்கள் மற்றும் பொருட்களை பெலாரஸ் நாட்டில் சந்தை அமைத்து ரஷ்ய படைகள் விற்பனை செய்ததாக உக்ரேனிய அதிகாரிகள் குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.