ஒருதலைப்பட்ச போர்நிறுத்த சூழலில்..உக்ரைன் மீது ரஷ்யா பாரிய தாக்குதல்
ரஷ்யா நடத்திய தாக்குல்களில் உக்ரைனில் 27 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லை தாண்டிய தாக்குதல்கள்
இந்த வார தொடக்கத்தில் உக்ரைன் ஒருதலைப்பட்சமாக போர் நிறுத்தத்தை அறிவித்தது.
ஆனாலும், இரவு முழுவதும் நடந்த எல்லை தாண்டிய தாக்குதல்கள் திறம்பட முறியடிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு நடந்த உக்ரேனிய டிரோன் தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டதாக கிரெம்ளினால் நியமிக்கப்பட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம், இணைக்கப்பட்ட கிரிமியா மற்றும் கருங்கடல் வான்வெளியிலும், பல்வேறு பிராந்தியங்களிலும் 53 உக்ரேனிய டரோன்களை இடைமறித்ததாக தெரிவித்தது.
27 பேர் பலி
அத்துடன் உக்ரைனை ஒட்டியுள்ள ரஷ்யப் பிராந்தியங்கள் மீதான தாக்குதல்களில் பலர் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், உக்ரைன் முழுவதும் ரஷ்யா நடத்திய பீரங்கித் தாக்குதல்களில் குறைந்தது 17 பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து கீவ்வின் போர் நிறுத்தம் அமுலுக்கு வருவதற்கு முன்பு, செவ்வாய்க்கிழமை இரவு உக்ரைனின் உள்துறை அமைச்சர் இகோர் கிளிமென்கோ, தற்போதைய நிலவரப்படி நாடு முழுவதும் ரஷ்யத் தாக்குதல்களின் விளைவாக 27 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் குறைந்தது 120 பேர் காயமடைந்துள்ளனர் என்று கூறினார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |