ட்ரம்ப்பின் அச்சுறுத்தலையும் மீறி ஒரே இரவில்..உக்ரைன் மீது Glide தாக்குதல்! 21 பேர் பலி
ரஷ்யா நடத்திய தாக்குதலில் உக்ரைனில் 21 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே இரவில்
போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு உடன்படாவிட்டால் ரஷ்யா மீது பொருளாதார தடைகள் மற்றும் வரிவிதிப்புகள் போன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) அச்சுறுத்தியிருந்தார்.
ஆனால், தற்போது ஒரே இரவில் Glide குண்டுகள் மற்றும் ஏவுகணைகள் மூலம் உக்ரைன் சிறைச்சாலை மற்றும் ஒரு மருத்துவ வசதி கூடத்தை ரஷ்யா தாக்கியுள்ளது.
இந்த தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
17 கைதிகள்
தென்கிழக்கு சபோரிஜியா பகுதியில் உள்ள சிறைச்சாலையில் 17 கைதிகள் இதில் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், பலியான 4 நான்கு பேர் டினிப்ரோ பிராந்தியத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அங்கு 8 பேர் காயமடைந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகத்து 7-9க்குள் அமைதி முயற்சிகள் முன்னேற வேண்டும் என ட்ரம்ப் முன்னர் எச்சரித்த நிலையில், ரஷ்யா இந்த தாக்குதலை நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |