600,000-க்கும் மேற்பட்ட மக்கள் மின்சாரமின்றி..ரஷ்யாவின் இரவுநேர தாக்குல் - உக்ரைன்
Russia strike on power substations and ships: உக்ரைனுக்கு இராணுவப் பொருட்களை ஏற்றிச் சென்ற 3 சரக்குக் கப்பல்கள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது.
உக்ரைனிய பாதுகாப்புத் துறைக்கு மின்சாரம் வழங்கிய இரண்டு மின் துணை நிலையங்கள் மற்றும் 3 சரக்கு கப்பல்கள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது.
கருங்கடல் துறைமுகத்தில் தாக்குதல்
உக்ரைனின் தென்மேற்குப் பகுதியில் உள்ள சோரனோமோர்ஸ்க் துறைமுகத்தில் ஒரு கப்பலையும், கருங்கடல் துறைமுகமான ஒடெசாவிற்கு ஆயுதங்கள் மற்றும் இராணுவ உபகரணங்களை தங்கள் படைகள் தாக்கியதாக, ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.

அதேபோல் உக்ரைனிய பாதுகாப்புத் துறைக்கு மின்சாரம் வழங்கிய இரண்டு மின் துணை நிலையங்கள் மீது தங்களது படைகள் இரவு நேரத் தாக்குதல்கள் நடத்தியதாகவும் தெரிவித்தது.
ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிவிப்பில், ஒடெசாவின் தென்மேற்கே தாக்கப்பட்ட மூன்றாவது கப்பலான உலர் சரக்குக் கப்பல், உக்ரைனின் ஆயுதப் படைகளுக்கான ஆயுதங்களையும் இராணுவ உபகரணங்களையும் ஏற்றிச் சென்றதாக கூறப்பட்டுள்ளது.
600,000-க்கும் மேற்பட்ட மக்கள் மின்சாரமின்றி
அதேபோல், உக்ரைனிய மின்சார நிறுவனமான DTEK டினிப்ரோபெட்ரோவ்ஸ்கில் உள்ள எரிசக்தி வசதிகள் மீது ரஷ்யா இரவில் நடத்திய தாக்குதலால் 600,000-க்கும் மேற்பட்ட மக்கள் மின்சாரமின்றி தவிப்பதாக கூறியது.
அத்துடன் இப்பகுதியில் உள்ள முக்கிய எரிசக்தி வசதிகள் இரவில் நடந்த தாக்குதலில் சேதமடைந்தன என்றும் அந்நிறுவனம் டெலிகிராமில் குறிப்பிட்டது.
