அமைதி முயற்சிகள் முடங்கிய நிலையில் உக்ரைன் மீது பாரிய தாக்குதல்! மேற்கு பகுதிகளை குறிவைத்த ரஷ்யா
உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் 15 பேர் காயமடைந்தனர்.
பாரிய தாக்குதல்
விளாடிமிர் புடினை அலாஸ்காவில் டொனால்டு ட்ரம்ப் சந்தித்து பேசியதைத் தொடர்ந்து, வெள்ளை மாளிகையில் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடந்தது.
அதில் ஐரோப்பிய தலைவர்களுடன் கலந்துகொண்ட வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை ஜனாதிபதி ட்ரம்ப் வரவேற்றார்.
வெள்ளை மளிகை பேச்சுவார்த்தைக்குப் பிறகு உக்ரைன் மீது ரஷ்யா பாரிய தாக்குதலை நடத்தியுள்ளது.
மேற்குப் பகுதிகளை குறி வைத்து
கிட்டத்தட்ட 1,000 நீண்ட தூர ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ரஷ்யா வீசியுள்ளது.
இராணுவ உதவி வழங்கப்பட்டு சேமிக்கப்படுவதாக நம்பப்படும் மேற்குப் பகுதிகளை குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் 15 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |