உக்ரைனின் துறைமுகங்கள், ராணுவ விநியோக மையங்கள் மீது தாக்குதல்: ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தகவல்
உக்ரைன் துறைமுகங்கள் மற்றும் ராணுவ விநியோக மையங்களை குறிவைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்
உக்ரைன் நாட்டின் போக்குவரத்து நெட்வொர்க் மற்றும் ராணுவ விநியோக மையங்களை குறிவைத்து ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி இருப்பதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட தகவலில், உக்ரைன் ராணுவத்திற்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் பிற விநியோகங்களை செய்து வந்த சரக்குக் கப்பல்கள் மற்றும் துறைமுகக் கட்டமைப்புகள் மீது ரஷ்ய ராணுவம் வெற்றிகரமாக தாக்குதல் நடத்தி இருப்பதாக தெரிவித்துள்ளது.

குறிப்பாக ரிவ்னே பகுதியில் அமைந்துள்ள எபிசென்டர்-கே என்ற விநியோக மையம் பலத்த சேதமடைந்து இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
அத்துடன் செர்னோமோர்ஸ்க் துறைமுகத்தை நோக்கி சென்று கொண்டிருந்த சரக்கு கப்பல் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.