உக்ரைன் துறைமுகங்கள், கப்பல்களை தாக்கியதாக ரஷ்யா அறிவிப்பு
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம், உக்ரைன் நகரங்களான ஒடெசா மற்றும் சோர்னோமோர்ஸ்க் துறைமுகங்களில் தாக்குதல் நடத்தியதாக அறிவித்துள்ளது.
இந்த தாக்குதலில், உக்ரைன் இராணுவத்திற்கு ஆதரவாக இருந்ததாகக் கூறப்படும் கப்பல்கள் மற்றும் துறைமுக வசதிகள் குறிவைக்கப்பட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

அமைச்சகத்தின் அறிக்கையின்படி, சோர்னோமோர்ஸ்க் துறைமுகத்தில் சரக்குகளை இறக்கும் ட்ரை-கார்கோ கப்பல், இராணுவ சரக்கு கிடங்கு, எரிபொருள் மற்றும் எண்ணெய் சேமிப்பு தொட்டிகள் தாக்கப்பட்டுள்ளன.
ஒடெசாவில், சரக்கு ஏற்றுமதி மற்றும் சேமிப்பு வசதிகள், மேலும் உக்ரைன் இராணுவத்திற்காக சரக்குகளை எடுத்துச் சென்ற ட்ரை-கார்கோ கப்பல் மற்றும் பல்க் கேரியர் ஆகியவை தாக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், ரஷ்ய ட்ரோன்கள் உக்ரைன் ட்ரோன்கள் சேமிக்கப்பட்டிருந்த மூன்று கிடங்குகளையும் தாக்கியதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Telegram-இல் வெளியிடப்பட்ட அறிக்கையில், கருங்கடல் மற்றும் சோர்னோமோர்ஸ்க் துறைமுகத்தில் நான்கு சரக்கு கப்பல்கள் மற்றும் ஒரு பல்க் கேரியர் தாக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுமார் 4.5 ஆண்டுகளாக நீடித்து வரும் போரில், கருங்கடல் மற்றும் அசோவ் கடல் பகுதிகளில் இரு தரப்பும் இராணுவ நடவடிக்கைகளை அதிகரித்துள்ளன. எண்ணெய் கப்பல்கள் மற்றும் சரக்கு கப்பல்களைச் சேர்த்து, பல கப்பல்கள் தாக்குதலுக்குள்ளாகி வருகின்றன.
இந்த தாக்குதல், ரஷ்யா-உக்ரைன் போரின் கடல் பரப்பில் பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்துகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |