ஐரோப்பிய வான் பாதுகாப்புக்கு சவால் விடுத்த ரஷ்யாவின் புதுவகையான போர்
செப்டம்பர் மாதத்திலிருந்து ஐரோப்பிய நேட்டோ நாடுகள் மீது ரஷ்யாவின் ட்ரோன் ஊடுருவல்களும் வான்வெளி அத்துமீறலும் அதிகரித்துள்ளது.
ஹைபிரிட் போர்
20க்கும் மேற்பட்ட ரஷ்ய ட்ரோன்கள் போலந்து வான்வெளிக்குள் நுழைந்த நிலையில், மூன்று ரஷ்ய இராணுவ விமானங்கள் எஸ்தோனியாவின் வான்வெளிக்குள் 12 நிமிடங்கள் அத்துமீறியது.

இதன் தொடர்ச்சியாக ஐரோப்பிய வான்வெளியில் பலமுறை ட்ரோன் நடமாட்டம் கண்டறியப்பட்டதுடன், அது எங்கிருந்து ஏவப்படுகிறது என்பது மர்மமாகவே உள்ளது.
ஆனால் ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் இந்த ஊடுருவல்களை ஹைபிரிட் போர் என்றே குறிப்பிட்டார். இந்த ஊடுருவல் அனைத்திற்கும் ரஷ்யா மட்டுமே பொறுப்பு என குறிப்பிட மறுத்த அவர்,
ஐரோப்பாவில் பிரிவினையை விதைப்பது ரஷ்யாவின் நோக்கம் என்பது தெளிவாகத் தெரிந்தது என்றார். பெல்ஜியத்தில் செவ்வாய்க்கிழமை மாலையில் ட்ரோன்கள் காணப்பட்டதைத் தொடர்ந்து பிரஸ்ஸல்ஸ் மற்றும் லீஜ் விமான நிலையங்கள் மூடப்பட்டன.
பல விமானங்கள் திருப்பி விடப்பட்டதுடன், புறப்படும் விமானங்களும் தாமதப்படுத்தப்பட்டது. செப்டம்பர் 10 அன்று செக் இராணுவம், அதன் இராணுவ வசதிகளுக்கு மேலே பறக்கும் அடையாளம் தெரியாத ட்ரோன்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகக் கூறியது.

செப்டம்பரில் ஆறு டென்மார்க் விமான நிலையங்களில் ட்ரோன்களின் ஊடுருவல் விமானப் போக்குவரத்தை முடக்கின. இது தங்கள் நாட்டின் மீதான ஹைபிரிட் தாக்குதல் என பிரதமர் Mette Frederiksen தெரிவித்திருந்தார்.
விமான நிலையங்கள்
செப்டம்பர் 19 அன்று மூன்று ரஷ்ய இராணுவ விமானங்கள் நேட்டோ உறுப்பு நாடான எஸ்டோனியாவின் வான்வெளியில் 12 நிமிடங்கள் அத்துமீறி நுழைந்தன. ஜேர்மனியில் இரண்டு தனித்தனி ட்ரோன் அத்துமீறல்களுக்குப் பிறகு பெர்லின் மற்றும் பிரெமன் விமான நிலையங்கள் வார இறுதியில் சிறிது நேரம் மூடப்பட்டன.

அக்டோபர் மாத தொடக்கத்தில் ஜேர்மனி முழுவதும் விமான நிலையங்கள் மற்றும் இராணுவ நிறுவல்கள் மீது ட்ரோன்கள் பறப்பது உறுதி செய்யப்பட்டன.
இதனிடையே, ஹீலியம் பலூன்கள் என அடையாளம் காணப்பட்டவை நேட்டோ உறுப்பு நாடான லிதுவேனியா வான்வெளியில் நுழைந்ததை அடுத்து, அக்டோபர் 28 அன்று வில்னியஸ் விமான நிலையம் மற்றும் பெலாரஸ் எல்லைக் கடவைகளை மூடப்பட்டது.

அக்டோபர் 6 ஆம் திகதி அதிகாலை, விமான நிலையத்திற்கு அருகில் ட்ரோன் ஒன்று காணப்பட்டதாக வந்த தகவலைத் தொடர்ந்து, நோர்வேயின் ஒஸ்லோ விமான நிலையம் அவசர நடவடிக்கைகளை முன்னெடுத்தது.
இதுபோலவே, போலந்து, ஸ்பெயின், ருமேனியா மற்றும் எஸ்டோனியா நாடுகளின் வான்பரப்பிலும் ட்ரோன் பறக்கவிடப்பட்டு விமான சேவைகள் முடங்கும் நிலை ஏற்பட்டது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |