ரஷ்யாவில் தாலிபான் மீதான தடை நீக்கம்
ரஷ்யாவில் தாலிபான் மீதான தடையை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் நீக்கியுள்ளது.
ஆப்கானித்தானின் ஆட்சி புரியும் தாலிபானுடன் உறவுகளை சாதாரணப்படுத்தும் நோக்கில், ரஷ்யாவின் உச்ச நீதிமன்றம் 20 ஆண்டுகளாக 'தீவிரவாத அமைப்பு' என வகைப்படுத்தப்பட்ட தாலிபானுக்கான தடையை நீக்கியுள்ளது.
வியாழக்கிழமை இந்த தீர்ப்பு பிறப்பிக்கப்பட்டது. இது உடனடியாக அமுலுக்கு வருகிறது என்று நீதிபதி ஒலெக் நெஃபெடொவ் தெரிவித்தார்.
1990-களில் ஆப்கானித்தான் உள்நாட்டுப் போர் காலத்திலிருந்து தாலிபானுடன் ரஷ்யாவுக்கு இருந்த பதற்றமான உறவு, சமீப ஆண்டுகளில் கூடிய நெருக்கத்திற்குப் பயணித்துள்ளது.
குறிப்பாக ISKP (ISIL/ISIS இன் பிராந்திய கிளை) போன்ற அமைப்புகளுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளில் தாலிபானும் ரஷ்யாவும் ஒரே நிலைப்பாட்டில் உள்ளன.
2023-ல் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், தாலிபானை “தீவிரவாதத்திற்கு எதிரான கூட்டாளி” என குறிப்பிட்டிருந்தார். அவரின் தூதர், தாலிபானை பயங்கரவாத பட்டியலில் இருந்து நீக்கும் திட்டம் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இனிவரும் காலங்களில், தாலிபானுடன் அரசியல், வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்தும் திட்டம் தொடரும் என்று வெளியுறவு அமைச்சர் செர்கேய் லாவ்ரோவ் கூறியுள்ளார்.
கஸகஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் ஆகிய நாடுகள் தாலிபானை “தீவிரவாத அமைப்புகள்” பட்டியிலிருந்து ஏற்கனவே நீக்கியுள்ளன.
இதேபோல் சீனா, இந்தியா, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளும் தாலிபானுடன் தூதரக உறவுகளை வைத்திருக்கின்றன. 2023-ல் சீனா, தாலிபான் ஆட்சிக்கு பிறகு தூதுவரை நியமித்த முதல் நாடாக ஆனது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |