உலகை அச்சுறுத்தும் 'சர்மட்' அணு ஆயுத ஏவுகணையை ரஷ்யா சோதனை
அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் 'சர்மாட்' கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ரஷ்யா சோதனை செய்துள்ளது.
உக்ரைன் மீதான படையெடுப்பு தொடர்பாக ரஷ்யாவிற்கும் மேற்கத்திய உலகிற்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், புதன்கிழமையன்று மாஸ்கோ, சர்மட் (RS-28 Sarmat Test) என்ற பெயரில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை (ICBM) வெற்றிகரமாகச் சோதனை செய்தது.
இந்த ஏவுகணைகள் அணு ஆயுதங்களையும் கொண்டு செல்ல முடியும். இந்த ஏவுகணையில் பத்து அல்லது அதற்கு மேற்பட்ட warheads பொருத்தப்படலாம். அதாவது ஒரே நேரத்தில் 10 அணுகுண்டுகளை வீசலாம்.
இது குறித்து ஒரு செய்தியை அனுப்பிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், சர்மட் ஏவுகணையை ரஷ்யா வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளதாகவும், இது ரஷ்யாவை அச்சுறுத்துபவர்களை ஒருமுறைக்கு இருமுறை சிந்திக்க வைக்கும் என்றும் கூறினார். உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர புடின் அணு ஆயுதங்களை பயன்படுத்தக்கூடும் என அமெரிக்காவும் உக்ரைனும் அச்சம் வெளியிட்டு வருகின்றன.
சர்மட் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஒரு கனரக ஆயுதம் என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறியது, இது மேற்கத்திய நாடுகளால் சாத்தான் என்று பெயரிடப்பட்ட சோவியத் தயாரிப்பான Voyevoda ஏவுகணைக்கு மாற்றாக பார்க்கப்படுகிறது. இது வருங்காலத்தில் எந்த ஒரு ஏவுகணை பாதுகாப்பையும் ஊடுருவ முடியும் என்று புடின் கூறினார்.
சர்மட் ஏவுகணையின் முக்கிய அம்சங்கள்
1. சர்மாட் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை பூமியில் உள்ள எந்த இலக்கையும் அழிக்க முடியும் என்று அதிபர் விளாடிமிர் புடின் கூறினார். சர்மட் ரஷ்ய ஆயுதப் படைகளை பலப்படுத்தும், அது ரஷ்யாவை வெளிப்புற அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்கும் மற்றும் நாட்டை அச்சுறுத்தும் மக்களை இருமுறை சிந்திக்க வைக்கும்.
2. கனரக RS-28 Sarmat ஏவுகணையில் RD-274 திரவ ராக்கெட் இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது . இந்த ஏவுகணையின் செயல்பாட்டு வரம்பு 18000 கிலோமீற்றர் ஆகும். கண்டான் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையின் குறைந்தபட்ச தூரம் 5,500 கி.மீ என்பது குறிப்பிடத்தக்கது.
3. சர்மட் ரஷ்யாவின் அடுத்த தலைமுறை ஏவுகணைகளில் ஒன்றாகும். இந்த ஏவுகணைகளில் கிஞ்சல் மற்றும் அவன்கார்ட் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளும் அடங்கும். ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் கூற்றுப்படி, சர்மாட் மற்ற ஆயுதங்களுடன் ஹைப்பர்சோனிக் கிளைடு வாகனத்தை எடுத்துச் செல்லும் திறன் கொண்டது.
4. இந்த ஏவுகணை மிக உயர்ந்த தந்திரோபாய மற்றும் தொழில்நுட்ப பண்புகளைக் கொண்டுள்ளது. இது அனைத்து ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகளையும் முறியடிக்கும் திறன் கொண்டது.
5. இது 200 டன்களுக்கும் அதிகமான எடையுள்ள ஆயுதங்களையும் பல அணு ஆயுதங்களையும் சுமந்து செல்லும் திறன் கொண்டது. ரஷ்யாவின் வடக்கு பகுதியில் உள்ள பிளெசெட்ஸ்க் காஸ்மோட்ரோமில் இந்த ஏவுகணை சோதனை செய்யப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
6. சர்மட் பூமியில் உள்ள எந்த துருவத்தையும் தாக்கக் கூடியது. எனவே, சர்மட் ஏவுகணை நிலம் மற்றும் செயற்கைக்கோள் அடிப்படையிலான ரேடார் மற்றும் கண்காணிப்பு அமைப்புகளுக்கு பெரும் சவாலாக உள்ளது.
7. இந்த ஏவுகணையின் நிறை 208.1 மெட்ரிக் டன், நீளம் 35.5 மீட்டர் மற்றும் வட்டமானது 3 மீட்டர். ஆர்எஸ்-28 சர்மட் ஏவுகணைக்குள் 10 முதல் 15 Warheads உள்ளன, அவை இரண்டாம் கட்டத்தில் அதிவேகமாக வெவ்வேறு இடங்களை தாக்கும்.
8. சர்மட் ஏவுகணையை ரஷ்ய நிறுவனமான Makeyev Rocket Design Bureau வடிவமைத்துள்ளது. இந்த ஏவுகணை 2009 முதல் சோதனையில் உள்ளது, மேலும் 2022-ல் ரஷ்ய இராணுவத்தால் மட்டுமே இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
9. சர்மட் ஏவுகணை மாக் 20.7 (மணிக்கு சுமார் 25,560 கிமீ) வேகத்தில் பறக்கக் கூடியது. இந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை S-400 போன்ற சிலோஸ் ஏவுகணை அமைப்புகளில் இருந்து ஏவ முடியும்.
10. RS-28 Sarmat ரஷ்யாவின் மிகவும் ஆபத்தான மூலோபாய ஆயுதமாக கருதப்படுகிறது. இந்த ஏவுகணை மார்ச் 1, 2018 அன்று ஜனாதிபதி புடினால் வெளியிடப்பட்டது.