35,000 கி.மீ. வரம்பு... Satan II ஏவுகணையை மீண்டும் சோதனை செய்த ரஷ்யா
ரஷ்யா தனது அணுசக்திப் படைகளை நவீனமயமாக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, செவ்வாய்க்கிழமை அன்று ஒரு புதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனை செய்துள்ளது.
மிகவும் சக்திவாய்ந்த
உக்ரைனில் போர் முடிவுக்கு வரும் நிலையில் உள்ளது என்று ஜனாதிபதி விளாடிமிர் புடின் கூறிய சில நாட்களுக்குப் பிறகு, இந்த ஏவுகணைச் சோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அணு ஆயுதம் தாங்கிய சர்மத் ஏவுகணை இந்த ஆண்டின் இறுதியில் போர்ப் பயன்பாட்டிற்கு வரும் என்று புடின் கூறியுள்ளார். சோவியத் காலகட்டத்தில் தயாரிக்கப்பட்ட வோயவோடா ஏவுகணைக்குப் பதிலாக இது உருவாக்கப்பட்டுள்ளது.
இது உலகின் மிகவும் சக்திவாய்ந்த ஏவுகணை என விளாடிமிர் புடினால் அறிவிக்கப்பட்டுள்ளது. மட்டுமின்றி, எந்தவொரு மேற்கத்திய நாடுகளின் ஏவுகணையையும் விட நான்கு மடங்கு ஆபத்தானது என்றும் புடின் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாம் உலகப் போரில் நாஜி ஜேர்மனியின் தோல்வியை நினைவுகூரும் வகையில், சனிக்கிழமையன்று செஞ்சதுக்கத்தில் நடைபெற்ற இராணுவ அணிவகுப்பை மேற்பார்வையிட்ட பிறகு, உக்ரைனில் நடைபெறும் போர் முடிவுக்கு வரவிருப்பதாகப் புடின் அறிவித்தார்.
இந்த அணிவகுப்பில் கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளில் முதல் முறையாக கனரக ஆயுதங்கள் எதுவும் சேர்க்கப்படவில்லை. 2000-ல் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, ரஷ்யாவின் அணுசக்தி மும்முனை அமைப்பில் உள்ள சோவியத் தயாரிப்பு ஆயுதங்களை மேம்படுத்தும் முயற்சிகளை புடின் தீவிரப்படுத்தி வருகிறார்.

தோல்வியில் முடிந்தது
தனது அணுசக்திப் படைகளைப் புதுப்பிப்பதற்கான ரஷ்யாவின் முயற்சி, அமெரிக்காவைத் தனது ஆயுதக் கிடங்கை நவீனமயமாக்கும் ஒரு பெரும் செலவுமிக்க நடவடிக்கையைத் தொடங்கத் தூண்டியது.
மேற்கத்திய நாடுகளால் Satan II என அடையாளப்படுத்தப்பட்டுவரும் Sarmat ஏவுகணை சோவியத் கால தயாரிப்பான சுமார் 40 'வோயேவோடா' ஏவுகணைகளை மாற்றீடு செய்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் உருவாக்கம் 2011-இல் தொடங்கிய நிலையில், 2024ல் முதல் முறையாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, தோல்வியில் முடிந்தது.
ஆனால் தற்போது மீண்டும் சோதனை முன்னெடுக்கப்பட்டதில் வெற்றி கண்டது. இந்த ஏவுகணையானது 35,000 கி.மீட்டருக்கும் (21,700 மைல்கள்) அதிகமான வரம்பையும், எதிர்கால ஏவுகணைத் தடுப்பு அமைப்புகள் எவற்றையும் ஊடுருவிச் செல்லும் மேம்பட்ட திறனையும் கொண்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |