உக்ரைனுக்கு ராணுவ உதவி செய்தாக கூறிய தென்கொரியா! மிரட்டல் விடுத்த ரஷ்யா
ரஷ்யா மற்றும் உக்ரைன் போரில் உக்ரைன் நாட்டு மக்களுக்கு ஆபத்து வந்தால், அணு ஆயுதங்களை அனுப்புவதாக தென்கொரியா தெரிவித்ததற்கு ரஷ்யா மிரட்டல் விட்டுள்ளது.
உக்ரைனுக்கு தென்கொரியா
உதவி கடந்த ஆண்டு பிப்ரவரியில் ரஷ்யாவால் துவங்கப்பட்ட இப்போரில் ரஷ்யா மிருகத்தனமாக உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியது. மனிதர்கள் கொன்று குவிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் பாரிய ராணுவ தாக்குதலையும் உக்ரைன் மீது நடத்தியுள்ளனர்.
@gettyimages
இதற்கு எதிராக உலக நாடுகள் அனைத்தும் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும் தற்போது நடைபெற்ற ஜி7 மாநாட்டில், ரஷ்யாவிற்கு போரில் உதவும் நாடுகள் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டுமென எச்சரித்திருந்தனர்.
@reuters
தென்கொரியாவின் எதிரி நாடான வடகொரியா உலக நாடுகளை அச்சுறுத்தியதைத் தொடர்ந்து, அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. மேலும் வடகொரியா மற்றும் தென் கொரியா இடையே பல ஆண்டுகளாக அவ்வப்போது சண்டை நடைபெற்று வருகிறது.
@ap
பொதுமக்களுக்கு எதிராக ரஷ்யா மற்றொரு பெரிய தாக்குதலை நடத்தினால், உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்புவது குறித்து தனது நாடு பரிசீலிப்பதாக தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோல்(Yoon Suk Yeol) கருத்து தெரிவித்திருந்தார்.
தென்கொரியாவை மிரட்டிய ரஷ்யா
இதனை தொடர்ந்து ரஷ்ய முன்னாள் ஜனாதிபதி டிமிட்ரி மெத்வதேவ்(Dmitry Medvedev) வடகொரியாவுக்கு நவீன ஆயுதங்களை அனுப்பப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
'தென் கொரியாவில் வசிப்பவர்கள் ரஷ்ய ஆயுதங்களின் சமீபத்திய வடிவமைப்புகளை, தங்கள் நெருங்கிய அண்டை நாடான வட கொரியாவிடம் பார்க்கும்போது என்ன சொல்வார்கள் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது' என மெத்வதேவ் டெலிகிராமில் ஒரு பதிவில் கூறியுள்ளார்.
@ap
தற்போதைய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் நெருங்கிய நண்பர் மற்றும் ரஷ்யாவின் உயர் மட்ட அரசியல் குழுவில் மிகவும் மோசமான உறுப்பினர்களில் ஒருவர் மெத்வதேவ் ஆவார்.
'துரதிர்ஷ்டவசமாக, இந்த முழு கதையிலும் தென்கொரியா மிகவும் நட்பற்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளது' என்று, ரஷ்யாவின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் முந்தைய நாள் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.