ஐரோப்பிய பாதுகாப்புக்கு ரஷ்யா அச்சுறுத்தல்: மக்ரோன் எச்சரிக்கை
ஐரோப்பிய பாதுகாப்புக்கு ரஷ்ய அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் எச்சரித்துள்ளார்.
ஐரோப்பிய பாதுகாப்புக்கு ரஷ்ய அச்சுறுத்தல்
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தனது நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றிய போது "ஐரோப்பிய பாதுகாப்புக்கு ஒரு புதிய சகாப்தம்" தொடங்கியுள்ளது என்று எச்சரித்துள்ளார்.
அத்துடன் ஐரோப்பாவில் எந்த நாடும் மற்றொரு நாட்டை தண்டனையின்றி ஆக்கிரமிக்க முடியும் என்றால், எந்த நாடும் பாதுகாப்பாக இருக்க முடியாது என்று மக்ரோன் வலியுறுத்தினார்.
உக்ரைனுக்கு அப்பால், ரஷ்யாவின் அச்சுறுத்தல் ஐரோப்பிய நாடுகளுக்கு உடனடி மற்றும் உண்மையான ஆபத்தை ஏற்படுத்துகிறது என்றும் அவர் அதில் எச்சரித்தார்.
\மேலும் அந்த உரையில், உக்ரைன் போர் மற்றும் ஐரோப்பா முழுவதும் அதன் விளைவுகள் குறித்து ஆழ்ந்த கவலைகளை மக்ரோன் வெளிப்படுத்தினார்.
எல்லை மீறும் புடின்
ரஷ்யா தனது இராணுவ திறனை வேகமாக அதிகரித்து வருவதாகவும், பாதுகாப்பு செலவினங்களை கணிசமாக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்ட மக்ரோன் "ஜனாதிபதி புடின் எதிரிகளை துன்புறுத்தவும், தேர்தல்களில் தலையிடவும் நமது எல்லைகளை மீறுகிறார்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும் "ஜனாதிபதி புடின் எதிரிகளை துன்புறுத்தவும், தேர்தல்களில் தலையிடவும் நமது எல்லைகளை மீறுகிறார்" என்றும் அவர் தனது உரையில் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |