நேபாள குடிமக்களை போருக்கு பயன்படுத்தாதீர்கள்..! இழப்பீடு வழங்க ரஷ்யாவிடம் அதிகாரிகள் கோரிக்கை
தங்கள் நாட்டு குடிமக்களை உக்ரைன் மீதான போர் தாக்குதலில் பயன்படுத்துவதற்காக வேலைக்கு எடுக்க வேண்டும் என ரஷ்யாவிடம் நேபாள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேபாள குடிமக்களை போருக்கு பயன்படுத்தாதீர்கள்
உக்ரைனுடனான போர் தாக்குதலுக்காக தங்கள் நாட்டு குடிமக்களை ரஷ்யா வேலைக்கு எடுப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என நேபாள அதிகாரிகள் ரஷ்யாவிடம் தெரிவித்துள்ளனர்.
உக்ரைன் போரில் 6 நேபாள கூலிப்படையினர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இந்த அழைப்பானது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
PTI
மேலும் நேபாளத்தின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைன் போரில் ரஷ்யாவால் ஈடுபடுத்தப்பட்டு கொல்லப்பட்ட நேபாளிகளின் பெயர் பட்டியல் வெளியிட்டுள்ளது.
அத்துடன் அதில், உயிரிழந்த நேபாளிகளின் உடலை ரஷ்யா தாயகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும், அவர்கள் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.
கூடுதலாக அறிக்கையில், ரஷ்யாவிற்கு போரில் சேவையாற்றி வரும் நேபாளிகளை விடுவிக்கவும் மற்றும் போர் தாக்குதலின் போது உக்ரைன் ஆயுத படையால் கைது செய்யப்பட்டவர்களையும் விடுவிக்க நேபாள அதிகாரிகள் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
AFP
ரஷ்யாவிற்கான நேபாள தூதர் மிலன் ராஜ் துலாதாரின் மதிப்பீட்டின் படி, கூலிப்படை ஆட்களாக ரஷ்ய ராணுவத்தில் 150 முதல் 200 நேபாளிகள் பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |