ட்ரோன் படைகளால் போலி கப்பல்களை அழித்து ரஷ்யா பயிற்சி., NATO நாடுகளுக்கு எச்சரிக்கை
வெடிகுண்டு ஏற்றிய கடற்படை ட்ரோன்களால் போலி கப்பல்களை அழித்து பயிற்சி நடத்திவருகிறது ரஷ்யா.
உக்ரைன் போரை மையமாகக் கொண்டு உருவாகிய கடற்படை ட்ரோன் யுத்தமுறைகளை, தற்போது ரஷ்யா மிக விரிவாக பயிற்சி எடுத்து வருகிறது.
ஆனால், இந்த பயிற்சிகள் உக்ரைனை மட்டுமல்லாமல் NATO நாடுகள் எதிராக ஏற்படும் சாத்தியமான எதிர்கால மோதலுக்கு ரஷ்யா தயாராகும் செயலில் ஒரு பகுதியாக இருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
"July Storm" என அழைக்கப்படும் ரஷ்யாவின் கடற்படை பயிற்சியில், வெடிகுண்டுகள் ஏற்றிய கடற்படை ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டன.
பாஸ்டிக் கடற்படை படையணிகள் பங்கு கொண்ட இந்த பயிற்சியில், போலியான எதிரி கப்பல் மீது ட்ரோன் நேராக சென்று மோதியதும், பாரிய வெடிப்பு ஏற்படுகிறது என ரஷ்ய பாதுகாப்பு துறை வீடியோ வெளியிட்டுள்ளது.
இந்த பயிற்சிகள் ஹெலிகாப்டர்கள், விமான ட்ரோன்கள், கப்பல்கள், நவீன ஆயுதங்கள் மூலம் நவீன கடற்படை போர் சூழ்நிலைகளை பிரதிபலிக்கின்றன.
உக்ரைனுக்கு பாரம்பரிய கடற்படை இல்லாத நிலையில், அவர்கள் உருவாக்கிய உள்நாட்டு கடற்படை ட்ரோன்கள் மூலம் ரஷ்யாவின் கப்பல்களை தாக்கி, பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
இதனால் ரஷ்யா தனது Black Sea படையை கிரிமியிலிருந்து நோவோரோஸ்ஸியிஸ்க் நோக்கி மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.
பயிற்சியின் போது, நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்பு, கண்ணிவெடி வைக்கும் பயிற்சிகள் மற்றும் ஏவுகணை தாக்குதல் பயிற்சிகளும் இடம்பெற்றுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Russia naval drone training, Russia July Storm drills, NATO Russia conflict, exploding drone ships, Russia military exercises 2025, Black Sea naval drones, Ukraine war naval drones, Putin naval war training, Russia vs NATO tension, drone warfare simulation