கெர்சன் நகர் மீது ரஷ்யா ஷெல் தாக்குதல்: மக்களை வெளியேற்றும் பணி நிறுத்தி வைப்பு
கெர்சன் நகர் மீது ரஷ்யா நடத்திய ஷெல் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்து இருப்பதுடன் 3 பேர் வரை காயமடைந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
நீர் மின் நிலைய அணையில் குண்டுவெடிப்பு
உக்ரைனிய ஜனாதிபதி ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு புதிய ஆயுத உதவிக்கான தொகுப்பை உறுதிப்படுத்தி வந்தார்.
இதை தொடர்ந்து ரஷ்யாவின் போர் நடவடிக்கைக்கு எதிரான பதிலடி தாக்குதலுக்கு உக்ரைன் முழுமையாக தற்போது தயாராக இருப்பதாகவும் விரைவில் தாக்குதல் முன்னெடுக்கப்படும் என்றும் சூளுரை விடுத்தார்.
AP
இந்நிலையில் தெற்கு உக்ரைன் பகுதியில் உள்ள சோவியத் கால ககோவ்கா நீர்மின் நிலைய அணை வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டது, அத்துடன் இதன் விளைவாக அணை சுற்றியுள்ள பெரும்பாலான பகுதிகள் வெள்ளம் சூழ்ந்து பல கிராமங்களை தண்ணீரில் மூழ்கடித்தது.
மேலும் இந்த வெள்ளத்தில் பலர் உயிரிழந்து இருப்பதுடன் 42,000க்கும் மேற்பட்ட மக்கள் ஆபத்தில் தள்ளப்பட்டு உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியை கொல்ல முயற்சி
அணை தகர்க்கப்பட்டு பல உக்ரைனியர்கள் உயிரிழந்த நிலையில், டஜன் கணக்கான குடியிருப்புகள் பாதிக்கப்பட்ட கெர்சன் நகரை பார்வையிடுவதற்காக உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி ஜுன் 8ம் திகதியான இன்று வருகை புரிந்து இருந்தார்.
Volodymyr Zelenskyy also visited the Mykolayiv region. https://t.co/bXB6DZqYLU pic.twitter.com/BTdIHysdpu
— NEXTA (@nexta_tv) June 8, 2023
அப்பகுதி மக்களுடன் இணைந்து சிறிது நேரம் அப்பகுதி பாதிப்புகளை பார்வையிட்ட உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, பின் அருகில் உள்ள மைகோலேவ் பகுதியை பார்வையிடுவதற்காக புறப்பட்டார்.
ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கெர்சன் நகரை விட்டு வெளியேறிய சிறிது நேரத்தில் ரஷ்யர்கள் அந்த தெரு மீது ஷெல் தாக்குதல் நடத்தினர். அதிர்ஷ்டவசமாக அப்பகுதியில் இருந்து ஜனாதிபதி ஜெலென்ஸ்கி வெளியேறிவிட்டதால் எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை.
ஷெல் தாக்குதலில் ஒருவர் பலி
கெர்சன் நகரில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் போது ரஷ்யா நடத்திய இந்த ஷெல் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார், அத்துடன் மூன்று பேர் வரை படுகாயமடைந்துள்ளனர்.
❗️ Russian occupiers shelling #Kherson during the evacuation of civilians
— NEXTA (@nexta_tv) June 8, 2023
The evacuation of residents is stopped. State Emergencies Service employees, residents and journalists are on the ground trying to hide from the shelling.
It is reported that at least three people were… pic.twitter.com/NbR0F62yew
இதனால் மீட்பு பணி நிறுத்தப்பட்டு இருப்பதாக அவசர சேவைகள் தெரிவித்துள்ளது, அத்துடன் செய்தியாளர்கள் மீட்பு பணியாளர் ஆகியோர் ஷெல் தாக்குதலில் இருந்து தப்பிக்க பாதுகாப்பான இடங்களில் பதுங்கியுள்ளனர்.