உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்க மறுப்பு தெரிவித்த ஐரோப்பிய நாடு
உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்க ஹங்கேரி மறுப்பு தெரிவித்துள்ளது.
ஹங்கேரி ஆயுதங்கள் அனைத்தும் உள்நாட்டில் தேவைப்படுவதால் உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்பாது என்று ஹங்கேரி பிரதமர் விக்டர் ஓர்பன் தெரிவித்துள்ளார்.
"ஹங்கேரிய ஆயுதப் படைகளுக்கு நாட்டின் எல்லைகளைப் பாதுகாக்க அவர்களின் அனைத்து ஆயுதங்களும் தேவைப்படுவதால், ஹங்கேரி தனது நிலையை மாற்றிக்கொள்ளாது. எனவே, இத்தாலி மற்றும் ஜேர்மனியைப் போலல்லாமல், நாங்கள் உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்ப மாட்டோம்" என்று பிரதமர் விக்டர் ஓர்பன் M1 ஒளிபரப்பு நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறினார்.
அதே நேரத்தில், ஐரோப்பிய ஒன்றியத்தில் ஒப்புக் கொள்ளப்பட்ட ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளை ஹங்கேரி ஆதரிக்கும் என்று அவர் வலியுறுத்தினார். மேலும், இந்த விடயத்தில் ஹங்கேரி குறித்து வெளியான அனைத்து அறிக்கைகளையும் தவறான தகவல் என்று அவர் தெரிவித்துள்ளார்.