டிரம்ப் போட்ட போஸ்ட்., பதிலுக்கு உக்ரைன் ஜனாதிபதி வெளியிட்ட அறிக்கை
உக்ரைன்-ரஷ்யா போர் தொடங்கியதிலிருந்து 43,000 உக்ரைன் வீரர்கள் உயிரிழந்ததாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
மேலும், 3,70,000 பேர் காயமடைந்துள்ளதாகவும், இதில் சிலர் ஒரே மனிதர் பல முறை காயமடைந்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜெலன்ஸ்கி, ரஷ்யாவின் இழப்புகள் குறித்து கூறுகையில், 1,98,000 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்திருக்கிறார்கள் என்றும், 5,50,000 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் கூறினார்.
டொனால்ட் டிரம்ப் கருத்து
அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், தனது Trust Social வலைதளத்தில் 6,00,000 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும், உக்ரைன் வீரர்களின் இழப்பு 4,00,000 எனவும் தெரிவித்தார்.
இதற்கு ஆதாரங்கள் அளிக்கவில்லை. மேலும், உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் அமைதி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
ரஷ்யா மறுப்பு
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் செய்தித் தொடர்பாளராக திமிட்ரி பெஸ்கோவ், டிரம்ப் கூறிய தகவல்களை மறுத்து, அது உக்ரைனின் அடிப்படையில் வெளியிடப்பட்ட எண்ணிக்கைகளாக இருக்கலாம் எனத் தெரிவித்தார்.
இந்த தகவல்களால் உக்ரைன்-ரஷ்யா போரின் இழப்புகள் மற்றும் தொடர்ச்சியான தாக்கங்கள் மீதான கவனம் அதிகரித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Volodymyr Zelensky, Donald Trump