உக்ரைனுக்கு ஷாக் கொடுத்த ரஷ்யா! ஒரே இடத்தில் செய்த பயங்கர சம்பவம்
ரஷ்யாவுடனான போரில் ஒரே நேரத்தில் 300 உக்ரைன் வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
உக்ரைன் மீது, ரஷ்யா ஐந்து மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், உக்ரைனின் கிழக்கு பகுதிகளை கைப்பற்ற, ரஷ்யா ஏவுகணைகளை சரமாரியாக வீசுகிறது.
டொனட்ஸ்க் மாகாணம் கிராமடோர்ஸ்கியில் உள்ள பள்ளி மீது ரஷ்ய ராணுவத்தினர் நடத்திய ஏவுகணை தாக்குதலில், அங்கு தங்கியிருந்த உக்ரைன் ராணுவ வீரர்கள் 300 பேர் உயிரிழந்தனர்.
File
ஆனால், பள்ளி மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியதை உறுதிப்படுத்திய உக்ரைன், ராணுவ வீரர்கள் உயிரிழப்பு குறித்து எதுவும் கூறவில்லை.
ரஷ்யாவின் தீவிரமான தாக்குதலை எதிர்கொண்டுள்ள உக்ரைனுக்கு, அமெரிக்கா, பிரித்தானியா ஆகிய நாடுகள் அதிகளவில் ஆயுதங்களை வழங்கி வருகின்றன. அதே போல நவீன ஏவுகணைகள், 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்கள் உள்ளிட்ட நவீன ஆயுதங்களை வழங்கவும் அமெரிக்க முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.