12,000 ரஷ்யர்களை வீழ்த்திய உக்ரைன்: இழப்பு மதிப்பீடு வெளியீடு
உக்ரைனில் இதுவரை குறைந்தது 12,000 ரஷ்ய வீரர்களை வீழ்த்தியுள்ளதாக உக்ரைன் இராணுவ படை தெரிவித்துள்ளது.
உக்ரைனிய ஆயுதப் படைகள் தெரிவித்ததாக தி கீவ் இண்டிபெண்டண்ட் செய்தி நிறுவனம் ரஷ்ய இராணுவத்தின் இழப்புகள் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, மார்ச் 10-ஆம் திகதி வரை தோராயமாக 12,000 ரஷ்ய துருப்புகள் வீழ்த்தப்பட்டனர். மேலும் ரஷ்யாவின் 49 போர் விமானங்கள், 81 ஹெலிகாப்டர்கள், 3,35 டாங்கிகளை உக்ரைனிய இராணுவம் வீழ்த்தியுள்ளது.
மேலும், 123 பீரங்கிகள், வீரர்களை ஏற்றிச்செல்லக்கூடிய 1,105 இராணுவ கவச வாகனங்கள், 56 MLRS ரொக்கெட் லான்சர்கள் (Multiple Launch Rocket System), 2 இராணுவ படகுகள் உக்ரைனிய இராணுவத்தால் விழத்தப்பட்டன.
அதுமட்டுமின்றி 526 ரஷ்யா இராணுவ வாகனங்கள், 60 எரிபொருள் டாங்கிகள், 7 ஆளில்லா விமானங்கள் (UAV), 29 விமான எதிர்ப்பு ஆயுதங்களை புடின் படையினர் உக்ரைனில் இழந்துள்ளனர்.
These are the estimates of Russia's losses as of March 10, according to the Armed Forces of Ukraine. pic.twitter.com/7BUHJDJ9eJ
— The Kyiv Independent (@KyivIndependent) March 10, 2022
உக்ரைனில் பிப்ரவரி 24-ஆம் திகதி ரஷ்ய படையினர் ஆக்கிரமிப்பை தொடங்கியதிலிருந்து, இன்று வரை தொடர்ந்து 16-வது நாளாக போர் நடக்கிறது.
இரு நாடுகளும் இதுவரை நான்கு முறை சுமுக பேச்சுவரத்தையில் ஈடுபட்டபிறகும், போர் முடிவுக்கு வருவது குறித்து எந்தவித முன்னேற்றமும் அறிவிக்கப்படவில்லை.