இப்படி செய்தால் உக்ரைன் - ரஷ்யா போரை உடனே நிறுத்தலாம்! யோசனை சொன்ன பிரபலம்
உக்ரைன் - ரஷ்யா இடையிலான போரை நிறுத்துவது தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் யோசனை கூறியுள்ளார்.
கடந்த மாதம் 24ஆம் திகதி தொடங்கிய உக்ரைன் - ரஷ்யா போர் சண்டை தொடர்ந்து நடந்து வருகிறது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.
அதே போல உக்ரைனும் சளைக்காமல் சண்டையிட்டு வருகிறது. இதனிடையில் இஸ்லாமிய ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் மாநாடு பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தில் உரையாற்றிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், உக்ரைன் – ரஷ்யா விவகாரத்தில் சீனா மற்றும் இஸ்லாமிய நாடுகள் மத்தியஸ்தம் செய்து அமைதியை நிலைநாட்ட முடியும் என்றார்.
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான இந்த போர் நீண்ட காலம் நீடித்தால் அனைத்து நாடுகளுமே அதன் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் இம்ரான் கான் கூறினார்.
உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டை பாகிஸ்தான் எடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.