எங்களுக்கு வருத்தமாக இருக்கிறது... : ஆடியோ வெளியிட்டார் வாக்னர் படைத் தலைவர் பிரிகோஜின்
எங்களுக்கு வருத்தமாக இருக்கிறது என்று 11 நிமிடம் ஓடக்கூடிய ஆடியோவை வாக்னர் படைத் தலைவர் பிரிகோஜின் வெளியிட்டுள்ளார்.
ரஷ்யாவிற்கு எதிராக திரும்பிய வாக்னர் அமைப்பு
உக்ரைன் மீது கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது.
ரஷ்யாவிற்கு 'வாக்னர்' என்ற மிகப்பெரிய தனியார் ராணுவ அமைப்பு உறுதுணையாக நின்று உக்ரைனுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வந்தது.
ஆனால், கடந்த வாரம் அந்த அமைப்பு ரஷ்யாவுக்கு எதிராக திடீரென்று திரும்பியது.
உடனே, ரஷ்ய ராணுவ இன்று ரஷ்ய ராணுவ ஹெலிகாப்டர்கள் Voronezh பகுதியில் உள்ள Wagner குழுவின் எரிபொருள் கிடங்குகளை குண்டுவீசி தாக்குதல் நடத்தியது.
வாக்னர் குழுவின் எரிபொருள் கிடங்குகளை ரஷ்ய ராணுவம் குண்டு வீசி தகர்த்ததாகவும், தங்கள் பாதையில் யாரும் குறுக்கிட வேண்டாம் எனவும் ரஷ்ய ராணுவத்திற்கு வாக்னர் படை எச்சரிக்கை விடுத்தது.
இதனால், ரஷ்யா கதிகலங்கிப்போனது. உடனே, பெலாரஸ் அதிபர் இந்த விவகாரத்தில் தலையிட்டு வாக்னர் குழுவினரை ஆசுவாசப்படுத்தினார். இதனால், வாக்னர் குழுவின் கோபம் சற்று குறைந்தது.
இதனையடுத்து, ரஷ்ய அதிபர் புதின், வாக்னர்குழு தலைவர் பிரிகோஜின் மீது நாங்கள் எந்தவிதமான வழக்குகளை போடமாட்டோம். மேலும், வாக்னர் படைக்கு எதிராக நாங்கள் எந்தவிதமான நடவடிக்கைகளில் இறங்கமாட்டோம் என்று தெரிவித்தார்.
இதன் பின்பு, ரஷ்யாவிற்கு எதிரான போரை வாக்னர் படை கைவிட்டது. இதனையடுத்து, வாக்னர்குழு தலைவர் பிரிகோஜின் ரஷ்யாவை விட்டு வெளியேறினார். அவர் எங்கு இருக்கிறார் என்று இதுவரை தெரியவில்லை.
ஆடியோ வெளியிட்ட பிரிகோஜின்
இந்நிலையில், 11 நிமிடங்கள் ஓடக்கூடிய ஒரு ஆடியோவை வாக்னர் அமைப்பின் தலைவர் பிரிகோஜின் தற்போது வெளியிட்டுள்ளார்.
அதில், நாங்கள் ரஷ்ய அரசை வீழ்த்துவதற்காக செயல்படவில்லை. எங்கள் வாக்னர் படையின் போராளிகளின் அழிவை தடுப்பதற்காகவே நாங்கள் இச்செயலில் ஈடுபட்டோம். உக்ரைன் மீது நடத்திய தாக்குதலில் ரஷ்ய ராணுவ தளபதிகள் அஜாக்கிரதையாக செயல்பட்டனர்.
அவர்களை பொறுப்புடன் ஆக்குவதற்காகதான் நாங்கள் இப்படி செய்தோம். ரஷ்ய மண்ணில் எங்கள் வாக்னர் படை வீரர்கள் போரிடவில்லை. ரஷ்ய போர் விமானத்தை மட்டுமே வீழ்த்தினோம். இது எங்களுக்கு வருத்தத்தை அளிக்கிறது என்று அந்த ஆடியோவில் பேசியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |