ரஷ்ய படைகளுக்கு வெடிக்கும் மோதல்! ரஷ்யா குண்டு வீசி தாக்குவதாக வாக்னர் தலைவர் குற்றச்சாட்டு
ரஷ்யா ராணுவம் தங்கள் படைகள் மீது குண்டுகளை வீசி தாக்குவதாக வாக்னர் கூலிப்படை தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் குற்றம்சாட்டியுள்ளார்.
வாக்னர் படை மீது ரஷ்யா தாக்குதல்
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் கடந்த ஆண்டு பிப்ரவரி 24ம் திகதி தொடங்கிய நிலையில் ரஷ்ய படைகளுடன் இணைந்து ரஷ்யாவின் கூலிப்படையான வாக்னர் குழுவும் களமிறங்கியது.
அத்துடன் உக்ரைனின் பல பகுதிகளை வாக்னர் கூலிப்படை ரஷ்யாவின் சார்பாக கைப்பற்றி இருந்தது.
ஆனால் சமீபத்தில் வாக்னர் படைகள் வெளியேறும் வழிகளை ரஷ்ய படைகள் மூடி விட்டதாகவும் வாக்னர் படை வீரர்களை குறிவைத்து ரஷ்ய இராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தியதாகவும் வாக்னர் கூலிப்படை தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் குற்றம்சாட்டி இருந்தார்.
Channels of the #Wagner PMC state that the #Russian army launched a missile attack on the location of the Wagner mercenaries. pic.twitter.com/GsAnfmuCJs
— NEXTA (@nexta_tv) June 23, 2023
அத்துடன் உக்ரைன் மீதான போர் தொடங்குவதற்கு ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்குவை பிரிகோஜின் குற்றம்சாட்டி இருந்தார்.
இந்நிலையில் வாக்னர் படை குழு மீது ரஷ்யா மீண்டும் குண்டு வீசி தாக்குதல் நடத்துவதாக பிரிகோஜின் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் இந்த நடவடிக்கையால் வாக்னர் குழுவின் அதிகமான வீரர்கள் கொல்லப்பட்டு இருப்பதுடன் வாக்னர் படை சேர்ந்த பலருக்கு தண்டனை வழங்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யா மறுப்பு
வாக்னர் படைக்குழு தாக்கப்படுவதாக அதன் தலைவர் வெளியிட்டு இருக்கும் குற்றச்சாட்டுக்கு ரஷ்யா முற்றிலுமாக மறுப்பு தெரிவித்துள்ளது.
#Prigozhin claimed that #Shoigu flew to Rostov to carry out an operation to destroy the #Wagner PMC.
— NEXTA (@nexta_tv) June 23, 2023
The #Russian Ministry of Defense denied that it has attacked positions of the Wagner PMC. pic.twitter.com/KhQXcWFDyw
இது தொடர்பாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வாக்னர் குழு மீதான தாக்குதல்கள் குறித்து அதன் தலைவர் பிரிகோஜின் சமூக ஊடகங்களில் பரப்பு வரும் அனைத்து தகவல்களும் உண்மையல்ல மற்றும் தகவல்களை தூண்டி விடுவதாகும் என தெரிவித்துள்ளது.
எப்படி இருப்பினும் இந்த முரண்பாடான கருத்துக்கள் ரஷ்ய குழுக்களுக்கு விரிசல் ஏற்பட்டுள்ளது என்பதை காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |