ஆயுதங்கள் சரியான நேரத்திற்கு வந்தால்... உக்ரைன் போர் எப்போது முடிவடையும்: ஜெலென்ஸ்கி தகவல்
சரியான நேரத்திற்கு மேற்கத்திய நாடுகளின் ஆயுதங்கள் உக்ரைனுக்கு கிடைக்கப் பெற்றால், இந்த ஆண்டின் இறுதிக்குள் போர் முடிவுக்கு வரும் என உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை கிட்டத்தட்ட 140 நாள்களை அடைந்து இருக்கும் நிலையில், இந்த போர் தாக்குதல் எப்போது முடிவடையும் என தெரியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
ரஷ்ய ஆதரவாளர்கள் அதிகமாக இருக்கும் கிழக்கு உக்ரைனிய பகுதியை முழுவதுமாக சுகந்திர பகுதியாக மாற்றும் முயற்சியில் ரஷ்ய படைகளும், ரஷ்யாவிடம் இழந்த பகுதிகளை மீட்கும் முயற்சியில் உக்ரைனிய படைகளும் தொடர்ந்து மாறிமாறி சண்டையிட்டு வருகின்றனர்.
If Western weapons “come on time”, then the military part of the conflict will end before the end of the year, President Zelenskyy in an interview with CNN. pic.twitter.com/BvdPjwaYl9
— NEXTA (@nexta_tv) July 8, 2022
ரஷ்யாவுடன் ஒப்பிடுகையில் ராணுவ பலத்தில் மிக குறைவான பலம் கொண்ட நாடான உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகளான அமெரிக்கா, பிரித்தானியா, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள் ஆயுதங்கள் வழங்கி உதவி வருகின்றனர்.
இந்தநிலையில், உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் எப்போது முடிவடையும் என CNN செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: ஜப்பானின் முன்னாள் பிரதமர் சுட்டுக் கொல்லப்பட்டார்...அதன் 5 முக்கிய நிகழ்வுகள்
அதில் உக்ரைனுக்கு வந்து சேர வேண்டிய மேற்கத்திய நாடுகளின் ஆயுதங்கள் சரியான நேரத்திற்கு வந்தால் இந்த போர் நடவடிக்கை இந்த ஆண்டின் இறுதிக்குள் முடிவடையும் எனத் தெரிவித்துள்ளார்.