கொடூர முகத்தை மீண்டும் காட்டிய ரஷ்யா: சக்தி வாய்ந்த ஏவுகணை ஏவி உக்ரைனிய நகரம் உருக்குலைப்பு
விமானம் தாங்கி கப்பல்களை மூழ்கடிப்பதற்காக தயாரிக்கப்பட்ட ஆறு டன் எடையுள்ள ஏவுகணைகளை உக்ரைனிய குடியிருப்புகள் மீது ரஷ்யா ஏவி தாக்குதல் நடத்தியுள்ளது.
கொடூர தாக்குதல்
உக்ரைனிய நகரமான டினிப்ரோவில் பொதுமக்களின் அடுக்குமாடி குடியிருப்புகளை குறி வைத்து, விமானம் தாங்கி கப்பல்களை அழிக்கக்கூடிய 6 டன் எடையுள்ள ஏவுகணைகளை ரஷ்யா ஏவியுள்ளது.
Kh-22 என்றும் அழைக்கப்படும் X-22 ஐப் பயன்படுத்தி இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது, மேலும் "கேரியர் கொலையாளிகள்" என்றும் அழைக்கப்படும் இந்த ஆயுதம், பனிப் போரின் போது அமெரிக்காவின் விமானம் தாங்கி கப்பல்களை அழிக்க ரஷ்ய பொறியாளர்களால் முதன் முதலில் வடிவமைக்கப்பட்டது.
Eternal memory to all whose lives were taken by ?? terror! The world must stop evil. Debris clearance in Dnipro continues. All services are working. We're fighting for every person, every life. We'll find everyone involved in terror. Everyone will bear responsibility. Utmost. pic.twitter.com/zG4rIF8nzC
— Володимир Зеленський (@ZelenskyyUa) January 14, 2023
52வது ஹெவி பாம்பர் ஏவியேஷன் ரெஜிமென்ட்டின் மூலோபாய குண்டுவீச்சு விமானங்கள் டினிப்ரோவில் இதுபோன்ற ஐந்து குண்டுகளை வீசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் சுமார் 3500 மைல்கள் வேகத்தில் இலக்கை நோக்கி பறந்து வந்த ஏவுகணைகளில் ஒன்று டினிப்ரோவில் உள்ள ஒன்பது மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை தாக்கியது, இந்த தாக்குதல் உள்ளே இருந்த பலரையும் உயிருடன் ஏரித்தது.
இதில் 15 வயது சிறுமி உயிரிழந்துள்ளதுடன், குறைந்தது 21 பேர் வரை கொல்லப்பட்டனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரஷ்யாவின் இந்த ஏவுகணை தாக்குதலில் 40க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கி உள்ளனர்.
Defense of Ukraine/Twitter
ஏவுகணைகளை வீழ்த்தும் திறன் உக்ரைனுக்கு இல்லை
இந்நிலையில் தாக்குதலுக்கு உள்ளான பிராந்தியத்தின் ஆளுநர் Valentyn Reznichenko, மீட்பு நடவடிக்கைகள் தொடர்கின்றன.
40க்கும் மேற்பட்டவர்கள் கதி என்னவென்று தெரியவில்லை என தெரிவித்துள்ளார். இதற்கிடையில் X-22 போன்ற ஆயுதங்களை சுட்டு வீழ்த்தும் திறன் தங்கள் இராணுவத்திற்கு இல்லை என்று உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Global Images Ukraine via Getty
இதுகுறித்து விமானப்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ள தகவலில், உக்ரைனின் ஆயுதப் படைகளிடம் இந்த வகை ஏவுகணையை சுட்டு வீழ்த்தும் திறன் கொண்ட ஃபயர்பவர் இல்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.
உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி (Volodymyr Zelensky) ஜனவரி 14ம் திகதி சனிக்கிழமை மேற்கத்திய நாடுகளை தங்கள் நாட்டிற்கு அதிக ஆயுதங்களை வழங்குமாறு வலியுறுத்தினார், மேலும் ரஷ்ய "பயங்கரவாதம்" பதிலடி கொடுப்பதன் மூலம் மட்டுமே முடிவுக்கு வர முடியும் என்று தெரிவித்தார்.