உக்ரேனியர்களை தடயமே இல்லாமல் சாம்பலாக்கும் ரஷ்யா! உளவுத்துறை அதிர்ச்சி தகவல்
போர்க்குற்றங்கள் தொடர்பான அனைத்து ஆதாரத்தையும் அழிக்குமாறு அதன் படைகளுக்கு ரஷ்ய தலைமை உத்தரவிட்டுள்ளதாக உக்ரேனிய உளவுத்துறை தெரிவித்துள்ளது.
பிப்ரவரி 24ம் திகதி முதல் உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து போர் தொடுத்து வரும் நிலையில், இரு தரப்பும் கடும் இழப்புகளை சந்தித்துள்ளது.
அதேசமயம், உக்ரைனின் புச்சா நகரில், ரஷ்ய படைகள் பொதுமக்களை படுகொலை செய்து போர்க்குற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதுதொடர்பான வீடியோக்கள் வெளியாகி சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
புச்சா படுகொலைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்கா, பிரித்தானியா நாடுகள் உக்ரைன் மீது புதிய கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன.
புச்சா படுகொலை குற்றச்சாட்டால், சர்வதேச நாடுகளிடையே ரஷ்யாவுக்கான ஆதரவு குறைந்துள்ளதால், புடினுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
ரஷ்யாவிடம் சரணடைந்த உக்ரேனிய வீரர்கள்! Chechen தலைவர் அறிவிப்பு
இந்நிலையில், உக்ரைனில் அதன் ராணுவம் போர்க்குற்றங்களில் ஈடுபட்டது தொடர்பான அனைத்து ஆதாரத்தையும் அழிக்க ரஷ்ய தலைமை உத்தவிட்டுள்ளதாக உக்ரேனிய உளவுத்துறை தெரிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து, ரஷ்ய படைகள் நடமாடும் தகன வாகனங்களை பயன்படுத்து வருவதாக உளவுத்துறை குறிப்பிட்டுள்ளது.
குறிப்பாக, மரியுபோல் நகரில் இறந்த மக்களின் சடலங்களை அழிக்க 13 நடமாடும் தகன வாகனங்கள் வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.