புடின் பயன்படுத்திய ரகசிய ஏவுகணை... 160 ரஷ்ய எண்ணெய், எரிசக்தி வசதிகளைத் தாக்கிய உக்ரைன்
ரஷ்யாவின் பொருளாதார வலிமையை உலுக்கும் வகையில், எண்ணெய் மற்றும் எரிசக்தி வசதிகளை குறிவைத்து உக்ரைன் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இதுவரை 160
செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் மட்டும் 20 ரஷ்ய எரிசக்தி வசதிகளை உக்ரைன் இராணுவம் தாக்கியுள்ளது. உக்ரைனின் SBU அமைப்பின் தலைவர் தெரிவிக்கையில்,

2025 ஆம் ஆண்டில் இதுவரை 160 ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிசக்தி வசதிகள் வெற்றிகரமாக குறிவைக்கப்பட்டதாக பதிவு செய்துள்ளார்.
ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிசக்தி வசதிகள் மீதான தாக்குதல்கள் தொடரும் என்றும் உக்ரைனில் ரஷ்யாவின் போருக்கு நிதியளிக்கும் வாய்ப்புகளை குறிவைக்கும் திட்டம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை உக்ரைன் இராணுவம் தொடர்ந்து தாக்கி வருகிறது, இது அந்த நாட்டின் இராணுவ நடவடிக்கை மற்றும் அதன் ஆழமான பொருளாதாரம் என இரண்டிலும் அழுத்தத்தை தீவிரப்படுத்தும் என்றே நம்பப்படுகிறது.
இந்த நிலையில் உக்ரைன் வெளிவிவகார அமைச்சர் வெளியிட்ட அறிக்கையில், ரஷ்யா தங்களது நாட்டை க்ரூஸ் ஏவுகணைகளால் தாக்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய ரகசிய ஏவுகணை காரணமாகவே டொனால்ட் ட்ரம்ப் தனது முதல் பதவிக்காலத்தில் ரஷ்யாவுடனான அணு ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தைக் கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

ரஷ்யாவின் இந்த 9M729 ஏவுகணையானது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து 23 முறை உக்ரைன் மீது பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 2022 ஆம் ஆண்டில் ரஷ்யாவால் 9M729 ஏவுகணையை இரண்டு முறை பயன்படுத்தப்பட்டதை உக்ரைன் பதிவு செய்துள்ளது.
9M729 ஏவுகணை
9M729 ஏவுகணை காரணமாகவே 2019ல் INF ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறும் நிலை ஏற்பட்டது. இந்த ஏவுகணையின் அமைப்பு INF ஒப்பந்தத்தை மீறுவதாக உள்ளது என்றும்,

அந்த ஏவுகணையின் அறிவிக்கப்பட்ட வரம்பான 310 மைல்கள் தொலைவைத் தாண்டி பறக்க முடியும் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஆனால், அமெரிக்காவின் புகாருக்கு ரஷ்யா மறுப்பு தெரிவித்தது.
கசிந்த தகவல்களின் அடிப்படையில், ரஷ்யா ரகசியமாக உருவாக்கியுள்ள 9M729 ஏவுகணையானது 2,500 கி.மீ தொலைவில் உள்ள இலக்கை தாக்கும் திறன் கொண்டதாகும்.

இந்த நிலையில், INF தடை செய்துள்ள 9M729 ஏவுகணையை உக்ரைன் மீது ரஷ்யா பயன்படுத்தியதன் ஊடாக அமெரிக்காவை புடின் அவமரியாதை செய்துள்ளதாகவும்,
உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஜனாதிபதி ட்ரம்பின் ராஜதந்திர முயற்சிகளை அவமதித்ததாகவும் உக்ரைன் வெளிவிவகார அமைச்சர் Andrii Sybiha தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |