அழிவுகரமான வெற்றிட குண்டை பயன்படுத்தும் ரஷ்யா: முதல்முறையாக குற்றம்சாட்டிய பின்லாந்து!
தெர்மோபரிக் குண்டுகள் உட்பட மிகவும் அழிவுகரமான ஆயுதங்களை உக்ரைனில் ரஷ்யா பயன்படுத்துவதாக பின்லாந்து ஜனாதிபதி சவுலி நினிஸ்டோ தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் ரஷ்யா நடத்தி வரும் அத்துமீறிய தாக்குலை தொடர்ந்து, நார்டிக் நாடான பின்லாந்து மற்றும் ஸ்வீடன் ஆகியவை மேற்கத்திய ராணுவ கூட்டமைப்பான நோட்டோவில் இணைய விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்துள்ளனர்.
இந்தநிலையில், பல ஆண்டுகளாக அணிச் சேரா கொள்கையில் இருந்த பின்லாந்து மற்றும் ஸ்வீடன் நாடுகள், தங்களது நோட்டோ விண்ணப்பத்தை சிலகாலங்களுக்கு முன் சமர்பித்து இருக்கும் நிலையில் முதல்முறையாக உக்ரைனில் ரஷ்யா அத்துமீறல்களை செய்வதாக குற்றம் சாட்டியுள்ளது.
இதுத் தொடர்பாக பின்லாந்து ஜனாதிபதி சவுலி நினிஸ்டோ தெரிவித்துள்ள குற்றசாட்டில், உக்ரைன் மீதான போரில் ரஷ்ய தெர்மோபரிக் குண்டுகளை பயன்படுத்தி மிகவும் அழிவுகரமான செயல்களில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளார்.
போரில் உக்ரைன் ரஷ்யா என இருதரப்பினரும் கனரக ஆயுதங்களை பயன்படுத்துவதாக தெரிவித்த பின்லாந்து ஜனாதிபதி சவுலி நினிஸ்டோ, உக்ரைனை கனரக ஆயுதங்களுடன் பின்லாந்து ஆதரிக்கும் என தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மற்றும் நேட்டோ நாடுகள் முன்பு ரஷ்யா தெர்மோபரிக் குண்டுகளைப் பயன்படுத்துவதாக குற்றம் சாட்டின, அவை சுற்றுப்புறத்தில் இருக்கும் ஆக்சிஜன்களை உள்வாங்கி மிகப்பெரிய வெடிப்பை ஏற்படுத்தும் வெற்றிட குண்டுகள் ஆகும், மேலும் அவை மிகவும் அழிவுகரமானவை.
கூடுதல் செய்திகளுக்கு: தீர்ந்து வரும் வெடிமருந்துகள்...உக்ரைனில் வேகமாய் முன்னேறும் ரஷ்ய படைகள்: அதிகரிக்கும் பதற்றம்!
வடகிழக்கு நகரமான கார்கிவில் ரஷ்யா தடைசெய்யப்பட்ட கிளஸ்டர் குண்டுகளை பயன்படுத்தியதாக அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அறிக்கை கூறியுள்ள நிலையில் அவரது கருத்துக்கள் வந்துள்ளன.