சூடானில் இரத்தக்களரிக்கு பின்னால் ரஷ்யாவின் வாக்னர் கூலிப்படையா? வெளிவரும் பகீர் பின்னணி
சூடானில் வெடித்துள்ள இரத்தக்களரிக்கு பின்னால் ரஷ்யாவின் வாக்னர் கூலிப்படையின் பங்களிப்பு இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
வாக்னர் கூலிப்படையுடன் ஒப்பந்தம்
சூடானில் பலம் வாய்ந்த RSF படையுடன் இணைந்து ஆட்சியில் இருக்கும் இராணுவத்தினருக்கு எதிராக ரஷ்யாவின் வாக்னர் கூலிப்படையும் களமிறங்கியுள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது.
@getty
கடந்த மூன்று நாட்களில் மட்டும் 97 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். RSF படையின் தலைவரான Hemedti என்பவர் ரஷ்யாவின் வாக்னர் கூலிப்படையுடன் வலுவான ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக்கொண்டுள்ளார் எனவும், 2017ல் இருந்தே வாக்னர் கூலிப்படையானது சூடானில் செயல்பட்டு வருகிறது எனவும் கூறப்படுகிறது.
மட்டுமின்றி RSF படையினருக்கு ஆயுதமும் பயிற்சியும் அளித்துவரும் வாக்னர் கூலிப்படையினருக்கு பலகோடி மதிப்புள்ள சூடான் தங்கத்தை கொள்ளையடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், தற்போதைய கலவரங்களில் வாக்னர் கூலிப்படையின் பங்கு என்ன என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்றே கூறப்படுகிறது. வாக்னர் கூலிப்படையின் ஆதரவு நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய ரஷ்ய நாட்டவர் ஒருவர், தங்கம் கடத்தியதாக கைது செய்யப்பட்ட சில மணி நேரத்திலேயே சூடானில் கலவரம் வெடித்துள்ளது என்றே தகவல் வெளியாகியுள்ளது.
2021ல் ரஷ்யாவின் தங்கம் கடத்தல் தொடர்பில் அப்போதைய சூடான் அரசாங்கம் விசாரணை முன்னெடுத்த நிலையில், வாக்னர் ஆதரவு குழு ஒன்று மக்களால் தெரிவு செய்த அரசாங்கத்தை கவிழ்க்க சதி நடந்தது எனவும் கூறப்படுகிறது.
தங்கம் கடத்தும் ரஷ்யர்கள்
தற்போது மீண்டும் RSF படையினருக்கு ஆதரவாக ரஷ்யாவின் வாக்னர் கூலிப்படை களமிறங்க வாய்ப்புள்ளதாகவும், தங்கம் கடத்தும் ரஷ்யர்களுக்கு எதிரான விசாரணைகளை முடக்க இது திட்டமிட்ட சதி எனவும் கூறப்படுகிறது.
@getty
மேலும், மேற்கத்திய நாடுகளின் தடைகளை எதிர்கொள்ள ரஷ்ய அரசாங்கம் சூடானில் இருந்து பில்லியன் மதிப்பிலான தங்கத்தை கடத்தும் திட்டத்தின் ஒருபகுதியாக கூட இருக்கலாம் இந்த இரத்தக்களரி எனவும் கூறுகின்றனர்.
30 ஆண்டுகள் சூடானில் கொடுங்கோல் ஆட்சி நடத்திய Omar al-Bashir கடந்த 2017ல் ரஷ்யாவுக்கு விஜயம் செய்து விளாடிமிர் புடினை சந்தித்த பின்னர் தான், சூடானில் வாக்னர் கூலிப்படையினர் முதல்முதலில் காணப்பட்டுள்ளனர்.
ஆனால் 2019ல் Omar al-Bashir-ஐ ஆட்சியில் இருந்து வெளியேற்றவும் வாக்னர் கூலிப்படையே காரணமாகவும் இருந்துள்ளது. இதனிடையே, 2021ல் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் வாக்னர் கூலிப்படையின் தங்கம் கடத்தல் குற்றங்களை விசாரிக்க தொடங்கியதும், அந்த ஆட்சியை கவிழ்த்து ராணுவத்தின் கட்டுப்பாட்டில் ஆட்சி அதிகாரம் ஒப்படைக்கப்பட்டது.
இராணுவம் ஆட்சிக்கும் வந்ததும், வாக்னர் மீதான விசாரணைகள் முடக்கப்பட்டதுடன், விசாரணை குழுவும் கலைக்கப்பட்டது.
உக்ரைன் போருக்கு பின்னரே, சூடானில் வாக்னர் கூலிப்படையின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.