உக்ரைன் போர் விரைவாக முடிவுக்கு வரவேண்டும்! ரஷ்ய வெளியுறவு செயலாளர் செர்ஜி லாவ்ரோவ்
உக்ரைன் உடனான மோதலை முடிந்தவரை விரைவாக முடிவுக்கு கொண்டு வர ரஷ்யா விரும்புவதாக அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தைக்கு இடமில்லை
உக்ரைன் ரஷ்யா போரின் தற்போதைய நிலவரப்படி, உக்ரைனிய நகரமான பாக்முட்டின் மத்தியிலும், வடமேற்கிலும் உள்ள இரண்டு மாவட்டங்களை ரஷ்யாவின் வாக்னர் படை கைப்பற்றி இருப்பதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் இரு நாடுகளுக்கு இடையிலும் ஆண்டு கணக்கில் தொடர்ந்து வரும் இராணுவ மோதல், சீக்கரமாக முடிவுக்கு வர பேச்சுவார்த்தை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பல்வேறு நாடுகள் அறிவுறுத்தி வருகின்றன.
Reuters
ஆனால் ரஷ்யா அனைத்து உக்ரைன் பிரதேசத்தில் இருந்தும் வெளியேறும் வரை அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்ற உக்ரைனின் நிலைப்பாட்டை அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா மீண்டும் வலியுறுத்தினார்.
போர் விரைவாக முடிய விரும்புகிறோம்!
இந்நிலையில் உக்ரைனில் மோதல் முடிந்தவரை சீக்கிரமாக முடிவுக்கு வர வேண்டும் என்று மாஸ்கோ விரும்புகிறது என திங்களன்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
EPA
பிரேசிலுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள செர்ஜி லாவ்ரோவ், அந்த நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் மௌரோ வியேராவைச் சந்தித்த போது இந்த கருத்தை தெரிவித்தார்.
இதையடுத்து கருத்து வெளியிட்ட பிரேசில் வெளியுறவுத் துறை அமைச்சர் மௌரோ வியேரா, உக்ரைனில் போர் நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதில் கவனம் செலுத்தும் நாடுகளின் குழுவை பிரேசில் உருவாக்க விரும்புவதாக.குறிப்பிட்டார்.
ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ்-வின் லத்தீன் அமெரிக்க பயணத்தை தொடர்ந்து, லாவ்ரோவ் கியூபா, நிகரகுவா மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளுக்கும் செல்ல உள்ளார்.