பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரானுக்கு ரஷ்யா கடும் எச்சரிக்கை
உக்ரைனுக்கு படைகளை அனுப்ப பிரான்ஸ் திட்டமிட்டுவருவதாக தகவல்கள் வெளியாகிவரும் நிலையில், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுக்கு ரஷ்யா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரானுக்கு ரஷ்யா கடும் எச்சரிக்கை

ரஷ்ய உக்ரைன் போரில், உக்ரைனுக்கு ஆதரவாக பிரெஞ்சுப் படைகளை அனுப்ப பிரான்ஸ் திட்டமிட்டுவருவதாக தகவல்கள் வெளியாகிவரும் நிலையில், ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினரான ஆண்ட்ரே கார்ட்டப்போலோவ் (Andrey Kartapolov), பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உக்ரைனுக்குள் நுழையும் எந்த வெளிநாட்டுப் படையும், ரஷ்யாவின் இலக்காகப் பார்க்கப்படும் என்று கூறியுள்ள ஆண்ட்ரே, அப்படி உக்ரைனுக்குள் நுழைபவர்கள் மீண்டும் தங்கள் சொந்த நாட்டுக்குத் திரும்பமாட்டார்கள் என்னும் ரீதியில் எச்சரித்துள்ளார்.
உக்ரைனுக்கு படைகளை அனுப்பும் மேக்ரானின் திட்டத்தை வர்ணிக்க, ’முட்டாள்தனம்’ என்னும் ஒரு வார்த்தையைத் தவிர பொருத்தமான வார்த்தை எதையும் தன்னால் கண்டுபிடிக்கமுடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் மேக்ரானின் திட்டத்துக்கு மோசமான பின்விளைவுகள் இருக்கும் என்றும் ஆண்ட்ரே எச்சரித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். | 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        