பற்றியெரியும் எண்ணெய் ஆலை: உக்ரைன் மீது அணு ஆயுதத் தாக்குதல் அச்சுறுத்தல் விடுத்த ரஷ்யா
உக்ரைன் விவகாரத்தில் விளாடிமிர் புடினின் கோரிக்கைகளுக்கு அடிபணிய மேற்கத்திய நாடுகள் மறுத்தால், பேரழிவை ஏற்படுத்தக்கூடிய அணு ஆயுதத் தாக்குதல்கள் நடத்தப்படும் என்று ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலகப் போராக மாறக்கூடும்
ரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சரான செர்ஜி லாவ்ரோவிடமிருந்தே இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது; உக்ரைன் போரில் ரஷ்யா பின்னடைவைச் சந்தித்து வரும் சூழலில், குறிப்பாக மாஸ்கோவின் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது நடத்தப்பட்ட கடுமையான தாக்குதல் அந்தப் பின்னடைவை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

மேற்கத்திய நாடுகளிடமிருந்து ரஷ்யா முன்னெப்போதும் இல்லாத அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளதாகக் கூறிய செர்ஜி லாவ்ரோ, தற்போதைய நெருக்கடி கட்டுப்பாட்டை மீறி மூன்றாம் அணு ஆயுத உலகப் போராக மாறக்கூடும் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
மேலும், இந்த நிலைமை உலகப் பாதுகாப்பிற்கு கடுமையான அச்சுறுத்தல்களை ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மட்டுமின்றி, நேட்டோவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான நேரடி மோதல், பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய அணு ஆயுதத் தாக்குதல்களை மிக விரைவாகத் தீவிரமடையக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
பிரான்ஸ் மற்ற மேற்கத்திய நாடுகளுக்கு அணுசக்திப் பாதுகாப்பை வழங்கும் அதே வேளையில், உக்ரைன் மற்றும் மால்டோவாவைத் தன்வசப்படுத்திக்கொண்டு,
ஆர்மீனியாவைத் தனது செல்வாக்கு மண்டலத்திற்குள் இழுக்கும் நோக்குடன், புடினின் ஆளுகைக்குட்பட்ட பகுதிக்குள் விரிவாக்கம் செய்யும் கனவு காண்பதற்காக பிரித்தானியா உள்ளிட்ட ஐரோப்பாவை அவர் விமர்சித்தார்.

புடினின் நிபந்தனை
மேலும், நேட்டோ ஏற்கனவே கிழக்கு நோக்கி விரிவடைந்து, பின்லாந்து மற்றும் ஸ்வீடனைத் தன்வசப்படுத்திக்கொண்டது என்றும் அவர் குறை கூறினார்.
அத்துடன், உக்ரைனைப் பொறுத்தவரை, அது அமெரிக்கா மற்றும் நேட்டோவிலிருந்து சுதந்திரமான, எதிர்கால ஐரோப்பிய இராணுவப் படையின் தாக்குதல் முனையாகப் பெரிதும் பார்க்கப்படுகிறது.

இருப்பினும், ரஷ்யா பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாகவும்; ஆனால், அது ரஷ்யாவுக்கு மேற்கத்திய நாடுகள் விடுக்கும் இறுதி எச்சரிக்கைகளின் அடிப்படையில் அல்லாமல், ரஷ்யாவின் மேற்கு எல்லைகளில் பாதுகாப்பிற்கு நம்பகமான உத்தரவாதம் அளிக்கும் புடினின் நிபந்தனைகளின் பேரிலேயே அமைய வேண்டும் என்பதையும் செர்ஜி லாவ்ரோ தெளிவுபடுத்தியுள்ளார்.

அத்துடன், மாஸ்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அவமானகரமான முறையில் அழிக்கப்பட்டு, நகரம் பேரழிவுப் புகையால் சூழப்பட்டதற்கு புடின் மிக மோசமானத் தாக்குதலால் பழிவாங்குவார் என்றும் லாவ்ரோவ் எச்சரித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |