உக்ரைன் போர் விரைவில் நிறுத்தப்படும்: ரஷ்ய ஜனாதிபதி புடின் வாக்குறுதி
ரஷ்ய படைகளின் ஆக்கிரமிப்புகளை உக்ரைனிய படைகள் விடுவிப்பு.
உக்ரைன் போரை நிறுத்த அனைத்தையும் விரைவில் செய்வோம் புடின் அறிவிப்பு.
உக்ரைன் போர் நிறைவடைதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் கூடிய விரைவில் செய்வதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ரஷ்யா போரானது கிட்டத்தட்ட ஏழு மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
உக்ரைன் தலைநகர் கீவ்வை ரஷ்ய படைகள் கைப்பற்ற தவறியதை அடுத்து, தென்கிழக்கு பிராந்தியங்களில் உள்ள பெரும்பாலான பகுதிகளை ரஷ்ய படைகள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
ஆனால் கடந்த சில வாரங்களாக உக்ரைனிய படைகள், ரஷ்ய படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட அனைத்து உக்ரைனிய பகுதிகளையும் விடுவிக்கும் முயற்சியில் நடத்தி வரும் எதிர் தாக்குதலில், பல்வேறு உக்ரைனிய குடியிறுப்புகள் விடுவிக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த முக்கிய உக்ரைனிய நகரமான Izyum உக்ரைனிய படைகளால் விடுவிக்கப்பட்டுள்ளது. மேலும் கெர்சன் நகரை விடுவிக்கும் நோக்கில் முன்னேறி வருகிறது.
Reuters
இந்நிலையில், உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரில் நடைபெற்ற தொலைக்காட்சி உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட ரஷ்ய ஜனாதிபதி புடினுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உரையாடல் நடத்தினார்.
அப்போது இந்த காலம் போர்காலம் அல்ல என்பதை நான் அறிவேன், இதைப் பற்றி நான் உங்களுடன் தொலைபேசியில் பேசி இருந்தேன் என பிரதமர் மோடி ஜனாதிபதி புடினிடம் கேள்வி எழுப்பினார்.
Sky News
அதற்கு சற்றே பதிலளிக்க தாமதித்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், உக்ரைனைப் பற்றி தனக்கு கவலை இருப்பதாகவும், ஆனால் மோதலை முடிவுக்கு கொண்டு வர மாஸ்கோ தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருவதாகவும் தெரிவித்தார்.
கூடுதல் செய்திகளுக்கு: ராணியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க ஆறு நாடுகளுக்கு மறுக்கப்பட்ட அழைப்பு: வெளிவந்துள்ள முழு பட்டியல்!
அத்துடன் உக்ரைனில் உள்ள மோதல்கள், நீங்கள் தொடர்ந்து வெளிப்படுத்தும் கவலைகள் பற்றிய உங்கள் நிலைப்பாடு எனக்குத் தெரியும், "இதை விரைவில் நிறுத்த நாங்கள் அனைத்தையும் செய்வோம்." என புடின் இந்திய பிரதமருக்கு வாக்குறுதி அளித்துள்ளார்.